இருமலா? அப்போ இந்த சுக்கி மல்லி காபி குடிச்சு பாருங்கள்! கண்டிப்பாக நிவாரணம் பெறலாம்!!

Author: Hemalatha Ramkumar
28 April 2023, 5:43 pm
Quick Share

இருமல், சளி எல்லாம் சாதாரணமாதாக இருந்த காலம் மாறி, தற்போது சளி இருமல் என்றாலே நம் அனைவருக்கும் சற்று பயமாகத் தான் உள்ளது. ஆம், கொரோனா என்ற நோயின் காரணமாகத் தான் இந்த பயம் தற்போது அதிகரித்து உள்ளது. அதனால் இருமல் இருந்தால் கூட மருத்துவரை ஆலோசிப்பது தான் நல்லது. இருந்தாலும், உங்களுக்கு சாதாரண இருமல் தான் என்றால், நீங்கள் சுக்கு மல்லி காபியை குடிக்கலாம். இது உங்களுக்கு இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும். வாருங்கள் இதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைக் குறித்து பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி விதைகள் – 1/4 கப்
மிளகு – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – 2
(காய வைத்த இஞ்சி) சுக்கு – 1 துண்டு
சர்க்கரை அல்லது பனை வெல்லம் – 1/3 கப்
நீர் – 1 கப்

செய்முறை:

சுக்கு மல்லி காபிக்கு முதலில் நாம் சுக்கு மல்லி காபி பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இது கடைகளிலும் கூட கிடைக்கிறது. ஆனால், வீட்டில் செய்து வைத்துக் கொள்வது நலல்து.

சுக்கு மல்லி காபி பொடி செய்ய, கடாயில் கொத்தமல்லி விதை, மிளகு, ஏலக்காய் அனைத்தையும் போட்டு வறுக்க வேண்டும். வாசனை வரும் வரை வறுத்துவிட்டு, அவற்றை வேறு ஒரு தட்டில் போட்டு ஆறவைக்கவும்.

நன்றாக ஆறிய பின்னர், நீங்கள் அவற்றை மிக்சியில் போட்டு கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அவ்வளவு தான் காபி பொடி தயார். அடுத்து இதை வைத்து தேவைப்படும் போதெல்லாம் சுக்கு மல்லி காபி போட்டு குடிக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் பனை வெல்லம் அல்லது சர்க்கரையை சேர்த்து கொதிக்க வைக்கவும். அதனை வடிக்கட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு அதே பாத்திரத்தில் 1 கப் நீர் ஊற்றவும். அதில் 1 ஸ்பூன் நீங்கள் பொடித்த வைத்துள்ள சுக்கு மல்லி பொடியை சேர்த்து கொதிக்க வைக்கவும். இது கொதித்த பின் இதனுடன் வடிகட்டி வைத்த நீரை கலந்து கொள்ளவும். அவ்வளவு தான், நீங்கள் சூடாகப் பருகலாம்.
இது உங்கள் தொண்டைக்கு இதமாக இருக்கும். அதோடு, இது மழைக் காலத்திற்கு ஏற்ற ஒரு பானம் ஆகும்.

Views: - 226

0

0