3-வது டி20 போட்டியிலும் மண்ணைக் கவ்வியது பாக்., : தொடரை வென்று ஆஸி., அசத்தல்..!

8 November 2019, 7:23 pm
finch-warner-updatenews360
Quick Share

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, டி20 தொடரையும் இழந்தது.

2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த ஆஸ்திரேலியா, 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில், முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இப்திகார் அகமது, இமாம் உல் ஹக் ஆகியோரைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்கு ரன்களை தொடவில்லை. பின்னர், எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் பின்ச் மற்றும் வார்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட் இழப்பின்றி, அணியை வெற்றி பெறச் செய்தனர்.

ஆரோன் பிஞ்ச் 52 ரன்களும், டேவிட் வார்னர் 44 ரன்களும் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா அணி 2-0 எனக் கைப்பற்றியது.

Leave a Reply