அழகுக்கு மட்டும் அல்ல…. மல்லிகைப்பூ எப்படி ஆரோக்கியம் தருகிறது என்பதையும்  தெரிஞ்சுக்கோங்க!!!

Author: Poorni
5 October 2020, 5:00 pm
Quick Share

பூக்கள் என்றாலே பெண்களுக்கு மிகவும் பிடித்தமான, மனதிற்கு நெருங்கிய ஒன்று என்றே சொல்லலாம். விசேஷ நாட்களில் பெண்கள் தங்கள் கூந்தலில் பூக்களை சூடுவார்கள். அதிலும் குறிப்பாக மல்லிகை பூ பெரும்பாலான பெண்களின் விருப்பம். பெண்கள் கூந்தலில் சூடும் பூக்கள் அவர்களுக்கு அழகு சேர்ப்பது மட்டும் இல்லாமல் ஒரு மருந்தாகவும் அமைகிறது என்பது பலருக்கும் தெரியாத ஒரு உண்மை. மல்லிகை பூவினால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

■உடலில் உள்ள சூடு குறைய மல்லிகைப்பூ உதவுகிறது. 

■மன அழுத்தத்தால் அவதிப்படும் பெண்கள் மல்லிகைப்பூவை தங்கள் கூந்தலில் சூடுவதினால் மன சாந்தி அடைந்து, புதிய புத்துணர்ச்சியை பெறுவார்கள். 

■குடலில் உள்ள புழுக்கள் காரணமாக உடல் மெலிந்து காணப்படும் பெண்கள் நான்கு மல்லிகைப்பூவை தண்ணீரில் ஊற வைத்து பருக வேண்டும். இவ்வாறு  நான்கு நாட்கள் செய்து வர புழுக்கள் அனைத்தும் வெளியேறி விடும். 

■ஒரு சில பெண்கள் தங்கள்  தலையில் மல்லிகைப்பூ சூடினால் தங்களுக்கு தலைவலி ஏற்படும் என நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு மாறாக அடிக்கடி தலைவலியினால் அவதிக்கு உள்ளாகும் பெண்கள் தங்கள் தலையில் மல்லிகைப்பூ சூடினால் நல்ல பலன் கிடைக்கும். 

■சிறுநீரக கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் மல்லிகை மொட்டுக்களை தொடர்ந்து சாப்பிட்டு வர சீக்கிரமே குணமடைவார்கள். 

■மல்லிகைப்பூவின் நன்மைகளை அறிந்த சீனர்கள் மல்லிகைப்பூ டீ செய்து பருகுகிறார்கள். இதன் காரணமாக  தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் இருந்து சீனாவிற்கு மல்லிகைப்பூ ஏற்றுமதி ஆகின்றது. 

■உடலில் வீக்கம் இருப்பவர்களுக்கு  மல்லிகைப்பூ ஒரு நல்ல மருந்து. 

■மல்லிகைப்பூவில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மூட்டு வலி பிரச்சினை உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். 

என்ன நண்பர்களே… மல்லிகைப்பூவின் நன்மைகள் பற்றி அறிந்து கொண்டீர்களா??? இந்த மகத்தான பூவின் நன்மைகளை அறிந்த நீங்கள் இதனை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழுங்கள்.!!

Views: - 156

0

0