பாரம்பரிய நெல்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கருங்குறுவை அரிசி!!!

3 February 2021, 10:54 pm
Quick Share

தற்போது இயற்கை விவசாயத்திற்கு மவுசு அதிகரித்து விட்டது. அதிலும் பாரம்பரிய நெல் இரகங்கள் பிரபலமடைந்து வருகின்றன. பாரம்பரிய நெல் வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் அரிசி கருங்குறுவை. இது ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிசி வகையாகும். பழங்காலத்தில் இருந்தே இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுத்தி வரப்பட்டுள்ளது. அதோடு மட்டும் அல்லாமல் உடலுக்கு தேவையான ஆற்றலை இது வழங்குகிறது. இழந்த சக்தியை மீண்டும் தர உதவுகிறது. 

கருங்குறுவை அரிசியை சாப்பிடும் போது நம் உடலில் உள்ள செல்கள் அனைத்தும் புத்துயிர் பெறுகிறது என கூறப்படுகிறது. அறிவியல் ரீதியாக புற்றுநோய்க்கு பல விதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் வேலையில் புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை இந்த கருங்குறுவை அரிசிக்கு உண்டு. இந்த விஷயத்தை  நன்கு உணர்ந்த நம் முன்னோர்கள் இதனை நன்கு பயன்படுத்தி வந்துள்ளனர். 

எனவே புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளவர்கள் புற்றுநோய் வராமல் தடுக்கவும், புற்றுநோயாளிகள் அதன் தீவிரத்தை குறைக்கவும் கருங்குறுவை அரிசியை கஞ்சியாக வைத்து சாப்பிட வேண்டும். ஏனெனில் இது புற்றுநோய் செல்களை அழிக்கக் கூடிய தன்மை கொண்டது. கொரோனா வைரஸூக்கு எதிராக பல ஆயுதங்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். 

இத்தகைய நேரத்தில் நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல வழிகளை  முயற்சி செய்து வருகிறோம். அதற்கு நம் முன்னோர்கள் பின்பற்றிய உணவே மருந்து இரகசியம் தான் சிறந்தது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் கருங்குறுவை அரிசி. சாதாரண அரிசியை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த பாரம்பரிய கைக்குத்தல் அரிசியை சாப்பிட்டு நம் நோய் எதிர்ப்பு சக்தியை ஈசியாக அதிகரிக்கலாம். 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கூட கருங்குறுவை, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய அரிசியினால் ஆன கஞ்சி தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது. எல்லா விதமான நோய்களுக்கும் மருந்து நம் கைகளிலே வைத்திருக்கிறோம். ஆனால் அதன் நன்மைகளை அறியாமல் அதனை பயன்படுத்தாமல் இருக்கிறோம். இனியாவது நம் பாரம்பரியத்தை நம்புவோம். நோயின்றி வாழ்வோம்.

Views: - 0

0

0