உடல் எடையை ஈசியா குறைக்கணும்னா மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்…!!!

1 December 2020, 7:14 pm
Quick Share

ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதற்கு ஒரு வழியை தேடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் சரியான இடத்தில் தான் உள்ளீர்கள். சீரான உடல் எடையை பெற ஆரோக்கியமான மற்றும் சுத்தமான உணவு சாப்பிடுவது அவசியம். இது மட்டும் இல்லாமல் உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டின் ஒத்துழைப்பு அனைத்தையும் விட மிக முக்கியம். 

உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு முறையை நீங்கள் பின்பற்ற வேண்டும். தற்போது நாம் பின்பற்றி வரும் தவறான உணவு முறை காரணமாக பெயர் கூட வைக்கப்படாத பல நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறோம். இதில் விஷயம் என்னவென்றால் இம்மாதிரியான நோய்கள் வருவதற்கு முக்கிய காரணமே உடல் பருமன் தான். 

உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் முதல் சில நாட்களில் உடற்பயிற்சி செய்வது மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது என இருப்பவர்கள் பாதியிலேயே அதனை கடைபிடிக்க முடியாமல் விட்டு விடுகின்றனர். இதன் பிறகு அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அவர்கள் செய்யும் தவறுகளில் முக்கியமான ஒன்று. உணவு ருசியாக இருந்து விட்டால் போதும். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று தெரியாமலேயே அதிகமாக சாப்பிட்டு விடுதிறோம். இது கூடுதல் உடல் எடைக்கு வழி வகுக்கும். எனவே அதிகப்படியான உணவு சாப்பிடுவதை தவிர்க்கவும். 

அடுத்ததாக அனைவரும் செய்யும் மிகப்பெரிய தவறு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது. சுத்திகரிக்கப்பட்ட உணவுகளில் நார்ச்சத்து முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். செரிமானத்திற்கு மிக முக்கியமான நார்ச்சத்து இல்லாத உணவுகளை நாம் சாப்பிடும் போது செரிமான கோளாறுகள் ஏற்படுகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருக்கும் சர்க்கரை இதய நோய் மற்றும் வயதான அறிகுறிகளுக்கு காரணமாகின்றன. இதனோடு வெற்று கலோரிகளை அதிகரித்து உடல் எடை அதிகரிக்க காரணமாகிறது. 

உணவுகளில் ஃபாஸ்ட் ஃபுட் தான் தற்போதைய டிரெண்ட். இந்த உணவு டேஸ்டாக இருந்தாலும் உடலுக்கு எக்கச்சக்கமான கெடுதலை தருகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த உண்மையை பற்றி தெரிந்திருந்தும் இதற்கு அடிமையாகிய நாம் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதை தவிர்க்க முடியாமல் விழித்து  இருக்கிறோம். கெட்ட  கொழுப்புகளை உடலுக்கு சேர்த்து தேவையற்ற உடல் எடைக்கு வழிவகுக்கிறது. 

மேலே கூறிய அனைத்தும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் செய்யக்கூடாதவை. அடுத்ததாக நீங்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான இரு விஷயங்கள் அதிகப்படியான தண்ணீர் குடிப்பதும் காய்கறிகள் மற்றும் பழங்களை தினசரி உணவில்  எடுத்து கொள்வதுமாகும். பசி எடுக்கும் போது ஸ்னாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக பழங்களை அல்லது காய்கறி சாலட் சாப்பிடுங்கள். மேலும் நீங்கள் அதிக அளவில் தண்ணீர் பருகும் போது உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும். எதாவது ஒரு விஷயத்தை அடைய வேண்டும் என்ற ஆசை இருந்தால் அதற்கான சில முயற்சிகளை மனம் தளராமல் கடைசி வரையில் செய்து முடிக்க வேண்டும். அப்போது தான் நாம் நினைத்ததை நம்மால் சாதிக்க முடியும்.

Views: - 0

0

0