ஃபிரிட்ஜில் கண்டிப்பாக வைக்கக்கூடாத உணவு பொருட்கள்!!!

22 January 2021, 8:26 pm
Quick Share

ஃபிரிட்ஜ் வந்தாலும் வந்துச்சு… எது கிடைத்தாலும் அதனை ஃபிரிட்ஜில் வைத்து விடுகின்றனர். பல வீடுகளில் இது தான் நடக்கிறது. ஆனால் உண்மையில் ஃபிரிட்ஜில் எந்தெந்த பொருட்களை வைக்கலாம், எதனை வைக்க கூடாது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப ஃபிரிட்ஜை பயன்படுத்துவது அவசியம். உணவை சரியாக சேமித்து வைப்பது உணவு கழிவுகளை குறைக்க உதவும். இந்த பதிவில் எதனை எல்லாம் ஃபிரிட்ஜில் கண்டிப்பாக வைக்க கூடாது என்பதைப் பற்றி பார்க்கலாம்.        

1. பிரெட்:

பிரெட்டை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது அது காய்ந்து, மிக விரைவாக பழையதாகிவிடும். எனவே  அதற்கு பதிலாக, குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் பிரெட்டை சேமிக்கவும்.  

2. வெங்காயம்:

வெங்காயத்தை எப்போதும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. ஃபிரிட்ஜில் வைத்தால் அது விரைவாக அழுகி விடும். அதனை காற்றோட்டமான இடத்தில் வைத்தால் தான் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.    

3. மெலான் பழங்கள்:

தர்பூசணி, முலாம் பழம், கிர்னி பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எப்போதும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. இது போன்ற பழங்களை இயற்கை வெப்பநிலையில் வைக்கும்போது அதன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. 

4. மூலிகை இலைகள்:

துளசி, கற்பூரவல்லி, ரோஸ்மேரி போன்ற இலைகளை ஒரு போதும் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். அவ்வாறு வைத்தால் அதன் மருத்துவ குணங்கள் குறைந்து விடும். 

5. தேன்:

பல பேர் தேனை ஃபிரிட்ஜில் வைக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். மூலிகை இலைகளை போலவே தேனை ஃபிரிட்ஜில் வைக்கும் போது அதன் மருத்துவ குணங்கள் குறைந்து விடும். எனவே தேனை குளுமையான இடத்தில், வெளிச்சம் படாமல் வைக்க வேண்டும். 

6. அவகேடோ:

அவகேடோ பழத்தை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடும் போது அதன் சுவை குறைந்து விடும். எனவே இனியும் இந்த தவறை செய்யாதீர்கள். 

7. உருளைக்கிழங்கு:

சாதாரண அறை வெப்பநிலையில் வைத்தாலே உருளைக்கிழங்கு நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். இதனை ஃபிரிட்ஜில் வைக்கும் போது உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து, சர்க்கரையாக மாறி விடுகிறது. 

8. நட்ஸ் வகைகள்:

பொதுவாக நட்ஸ் வகைகளை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்தாலே ஒரு சில  நாட்களுக்கு கெடாமல் இருக்கும். அதனை மாத கணக்கில் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் ஃபிரிட்ஜில் வையுங்கள். 

9. சாக்லேட்:

பலரது வீட்டு ஃபிரிட்ஜை திறந்தாலே பெரும்பாலும் அதில் சாக்லேட் இருக்கும். சாக்லேட்டை ஃபிரிட்ஜில் வைக்கும் போது அதன் சுவை மற்றும் நிறம் மாறி விடுகிறது. எனவே காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு சேமித்து கொள்ளுங்கள். 

எந்த பொருட்களை எல்லாம் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது என்பதை இப்போது தெரிந்து கொண்டோம். இனி இதனை ஃபாலோ பண்ணுங்க. சமூக நலன் கருதி updatenews360.

Views: - 0

0

0