உடற்சூட்டைக் குறைக்கவும் எடை குறையவும் இந்த ஜூஸ் எல்லாம் குடிக்கலாமா?!

4 May 2021, 3:06 pm
fruit juice reduce body heat and weight loss
Quick Share

இன்றைய காலகட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாகி கொண்டே வருவதால் ஊரடங்கு செயல்முறையும் அமலில் இருந்துக்கொண்டே இருக்கிறது. வீட்டிலேயே இருந்து வேலை பார்ப்பதால் பலருக்கும் உடல் எடையை குறைப்பதே மிகப்பெரிய சவாலாக மாறிவருகிறது. இதனால் உடல் எடையை குறைக்க மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், பலருக்கும் என்ன மாதிரியான உணவுகளை அல்லது பானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தெரியவில்லை. 

நீங்களும் எடையைக் குறைக்க வேண்டும் முயற்சிக்கிறீர்கள் என்றால், கலோரிகள் குறைவாக உள்ள சில உணவு மாற்றுகளை முயற்சிப்பது அவசியம். ஆனால் நீங்கள் உண்ணும் உணவில் மட்டுமே கலோரிகள் இருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டும். ஏனென்றால் தண்ணீரைத் தவிர, நாள் முழுவதும் நீங்கள் குடிக்கும் பானங்களில் கூட அதிக கலோரிகள் கொண்ட பானங்கள் உள்ளன. எனவே, எடை இழப்பு சீராக இருக்கவும், திறம்பட எடையைக் குறைக்கவும் என்ன மாதிரியான பானங்களை நீங்கள் உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம்.

கோடை காலங்களில் உடலில் நீரிழப்பு அதிகமாக இருக்கும் என்பதால் நீரேற்றத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அதனால் அது போன்ற நேரத்தில் உடலை நேரேற்றத்துடன் வைத்துக்கொள்ள பழச்சாறுகளை அருந்துவது முக்கியம். உடற்சூட்டைக் குறைக்கும் அதே சமயத்தில் உடல் எடைக்கூடாமலும் இருக்க என்ன மாதிரியான பழ ஜூஸ் எல்லாம் குடிக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

தர்பூசணி பழச்சாறு

 • இனிப்பு மற்றும் புத்துணர்ச்சியூட்டும் தன்மைக் கொண்ட தர்பூசணி பழச்சாறு ஒரு சிறந்த கோடைகால பானமாகும். 
 • தர்பூசணி பழம் 94 சதவீதம் நீரால் ஆனது மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள ஒரு உணவு. 
 • தர்பூசணி பழச்சாறுடன் புதினா இலைகளையும் சேர்த்து எடுத்துக்கொண்டால் சுவையோடு புத்துணர்ச்சியாகவும் இருக்கும். 

வெள்ளரி பழச்சாறு

 • வெள்ளரிப்பழம் மற்றொரு சுவையான ஆரோக்கியமான உணவு ஆகும். நீங்கள் எடை இழக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் வெள்ளரிக்காய் அல்லது வெள்ளரிப்பழத்தைக் கட்டாயம் உங்கள் கோடைகால உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
 • இந்த பழத்தில் கலோரிகள் மிக குறைவு, நார்ச்சத்து மற்றும் நீர் உள்ளடக்கம் அதிகம். இதிலிருக்கும் நார்ச்சத்து பசி இன்றி திருப்தியாக உணர வைக்கிறது. 
 • இந்த வெள்ளரிப்பழ சாற்றோடு எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலைகளையும் சேர்த்து குடித்தால் இன்னும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

பீட்ரூட் சாறு

 • பீட்ரூட் உடல் எடையை குறைக்க உதவும் ஒரு பானம், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவியாக இருக்கும். 
 • பீட்ரூட் கரையக்கூடிய மற்றும் கரையாத உணவு நார்ச்சத்து இரண்டுமே கொண்டது. இந்த பானம் ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. 
 • இரும்பு மற்றும் நார்ச்சத்து, ஃபோலேட் (வைட்டமின் B9), மாங்கனீசு, பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின் C போன்ற ஊட்டச்சத்துக்கள் பீட்ரூட்டில் அதிகம் நிறைந்துள்ளன.

ஆரஞ்சு சாறு

 • ஆரஞ்சு பழச்சாறு வைட்டமின் C நிறைந்த உணவென்பதால் நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டது. சர்க்கரை இல்லாமல் ஆரஞ்சு பழச்சாறு குடிப்பது எடையிழப்புக்கு சிறந்தது. 
 • இந்த பழச்சாறு குடிப்பதன் மூலம் கூடுதல் ஊட்டச்சத்துக்களைப் பெறுவீர்கள்.

மாம்பழச்சாறு

 • கோடை காலம் என்றாலே மாம்பழ சீசன் என்று சொல்லலாம். மாம்பழம் அதிகம் விரும்பப்படும் கோடைகால பழம். 
 • மாம்பழத்தில் வைட்டமின் K, வைட்டமின் A, வைட்டமின் C, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் உள்ளன. 
 • குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்படும் மாம்பழச்சாறு உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளைத் தரவல்லது. 
 • ஆரோக்கியமற்ற உணவுகளுக்கான உங்கள் ஏக்கத்தைத் தடுக்கிறது மற்றும் உங்கள் இதயம், தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியது.

Views: - 140

0

0

Leave a Reply