“சிவப்பு நிற காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதால்….” | இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

16 July 2021, 2:01 pm
Red fruits and vegetables aren’t just the color of your heart — they can help protect it, too.
Quick Share

சிவப்பு பழங்கள் மற்றும் காய்கறிகள் எல்லாம் நம் இதயம் மற்றும் இரத்தத்தின் நிறத்தில் இருப்பது மட்டுமல்ல. இதயத்தைப் பாதுகாக்கும் பண்புகளையும் அவை கொண்டுள்ளன. தாவரங்களிலிருந்து கிடைக்கும் உணவுகளில் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் உள்ளன. இவை நம் உடலுக்கு தேவையான உய்ரிச்சத்துக்களை வழங்குகின்றன. பிற நன்மைகளில், சிவப்பு உணவுகள் உங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்க மற்றும் புற்றுநோய்க்கு எதிராக போராட உதவுகின்றன.

பைட்டோநியூட்ரியண்ட்ஸ் என்றால் என்ன?

பைட்டோநியூட்ரியண்ட்ஸ் என்பது தாவரங்கள் செழிப்பாக வளரவும், பூச்சு தாக்குதல்களுக்கு எதிராக தற்காத்துக் கொள்ளவும் உதவும் இயற்கை ரசாயனங்கள் ஆகும். பைட்டோநியூட்ரியன்களும் அவற்றின் சாயலுக்கு ஏற்ப வெவ்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. உங்கள் உடலுக்குத் தேவையான பைட்டோநியூட்ரியன்களைக் கொடுக்க பலவிதமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது முக்கியம்.

சிவப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் என்ன பைட்டோநியூட்ரியண்ட்ஸ் உள்ளன?

சிவப்பு பழங்கள் மற்றும் காய்கறிகளில் அந்தோசயினின்ஸ், எலாஜிக் அமிலம் மற்றும் லைகோபீன் எனப்படும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் ஆகியவை உள்ளது. அவை உங்கள் இதயம், மூட்டுகள், தோல் மற்றும் கண்களுக்கு நன்மைத் தரக்கூடியவை, மேலும் அவை புற்றுநோயை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன.

சிவப்பு பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் உள்ளன?

அவை இதய நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

லைகோபீன் குடல் மற்றும் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை நீக்குகிறது. இதன் மூலம் நம் இதயத்தைப் பராமரிக்கும் வேலையைச் செய்கிறது.

சிவப்பு உணவுகளில் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. சிவப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சோடியம் போன்ற தாதுக்கள் உங்கள் உடலின் திரவ அளவைக் கட்டுப்படுத்த உதவும். 

இவை உங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவியாக இருக்கும்.

இது புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவியாக இருக்கும்.

புற்றுநோய் செல்கள் உடலில் உற்பத்தி ஆவதைக் குறைக்க சிவப்பு நிற உணவுகள் உதவுகின்றன.

உடலில் உள்ள நச்சுகளை புற்றுநோயாக மாற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களை இந்த உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் அகற்ற முடியும்.

கட்டிகள் மற்றும் வீக்கங்கள் ஏற்படாமல் உடலை பாதுகாப்பாக பராமரிக்கும்.

இந்த உணவுகள் ஆண்டிமைக்ரோபியல் முகவர்களாக (பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து) செயல்படுவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.

ஈஸ்ட்ரோஜன் மற்றும் இன்சுலின் போன்ற ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

வைட்டமின்கள் A மற்றும் C ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் தோல், முடி மற்றும் நகங்களை பாதுகாக்கவும் பராமரிக்கவும் உதவியாக இருக்கின்றன.

Views: - 197

1

0