மணத்தக்காளி பழம் மற்றும் கீரையில் உங்களுக்கே தெரியாமல் மறைந்திருக்கும் 24 விஷயங்களைப் பற்றி தெரியுமா?
Author: Hemalatha Ramkumar14 August 2021, 11:42 am
மணத்தக்காளி (Black Night Shade) சிறந்த மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த தாவரத்தின் அனைத்து பகுதிகளையும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் உட்பட எல்லோருமே உட்கொள்ளலாம்.
தமிழ்நாட்டில், மணத்தக்காளி கீரை பொதுவாக வயிறு, வயிறு மற்றும் வாய் புண், சளி மற்றும் மூலம் போன்ற பிரச்சினைகளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
தமிழக மக்கள் மணத்தக்காளி இலைகள் மற்றும் பழங்களைப் பயன்படுத்தி சுவையான மற்றும் ஆரோக்கியமான சமையல் வகைகளைச் செய்கிறார்கள். மணத்தக்காளி கீரை பொரியல், மணத்தக்காளி கீரை கூட்டுக்குழம்பு வகைகள், மணத்தக்காளி கீரை சட்னி போன்ற பல்வேறு பக்க உணவுகளை மணத்தக்காளி போன்ற உணவு பதார்த்தங்கள் எல்லாம் தமிழக மக்களால் அதிகம் விரும்பபப்டும் மணத்தக்காளி உணவுகள் ஆகும்.
மணத்தக்காளி பழங்களை அப்படியே சாப்பிடலாம், மேலும் பல்வேறு சமையல்களில் இந்த மணத்தக்காளி காய்களை சேர்த்தும் சமைக்கலாம். இந்த மணத்தக்காளி சாப்பிடுவதால் நன்மைகள் உள்ளது என்பது தெரியும். ஆனால், என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை கொஞ்சம் தெரிந்துக்கொள்ளலாம்.
1. ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டது என்பதால் உடலுக்கு நோயெதிர்ப்பு ஆற்றலை வழங்கும்
2. வாய் புற்றுநோய் மற்றும் மார்பு புற்றுநோயை எதிர்த்து போராட மிகவும் உதவியாக இருக்கும்.
3. நீரிழிவு நோயை குணப்படுத்த உதவும் இயற்கை மருந்து.
4. கால் ஊறல், உடல் எரிச்சல் உணர்வு போன்றவற்றை எதிர்க்கும் அழற்சி எதிர்ப்பு பண்புககளைக் கொண்டது
5. ஆஸ்துமா நோய்க்கு இயற்கையாக தீர்வை வழங்கக்கூடியது
6. அல்சர் நோயைக் குணப்படுத்த உதவியாக இருக்கும்
7. தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவியாக இருக்கும்
8. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலுக்கு நோயெதிர்ப்பு ஆற்றலை வழங்கும்
9. சரும பொலிவை வழங்க மிகவும் உதவியாக இருக்கும்
10. கல்லீரல் சம்பந்தமான பிரச்சினைகளைக் குணப்படுத்த்தி உங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள ஏற்றது
11. மஞ்சள் காமாலை வராமல் தடுக்க உதவும் மாமருந்து
12. பசியின்மைப் போக்கி உங்களுக்கு பசி உணர்வை உண்டாக்கும்
13. உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க மிகவும் உதவியாக இருக்கும்.
14. செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகளைக் குணப்படுத்தி அஜீரண கோளாறை குணப்படுத்தும்.
15. நோய்த்தொற்றுகளால் ஏற்படும் காய்ச்சலைக் குணப்படுத்த சிறந்தது
16. முதுகு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்
17. கரப்பான் நோய் வராமல் தடுக்க மிக உதவியாக இருக்கும்.
18. அக்கி பிரச்சினையைக் குணப்படுத்த உதவும்
19. தொண்டைப் புண் மற்றும் தொண்டை வறட்சி பிரச்சினையை போக்க உதவும்.
20. இயற்கை மலமிளக்கியாக செயல்படும் தன்மைக் கொண்டது
21. சிறுநீரக செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது
22. தோல் வியாதிகளை குணப்படுத்தும்
23. நல்ல தூக்கத்தை வழங்குகிறது
24. மண்ணீரல் நோய்களை குணப்படுத்தி உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்
0
0