இறால் உங்களுக்கு பிடிக்குமா? இறால் சாப்பிடறது நல்லதுன்னு நினைக்கிறீங்களா? நீங்க நினைக்கிறது சரிதானா?

Author: Hemalatha Ramkumar
13 August 2021, 4:02 pm
health benefits of prawn
Quick Share

கடல் உணவுகளில் மீன் இறைச்சிக்கு அடுத்து இறால் பலருக்கும் பிடித்தமான ஒரு உணவு. இந்த இறால் சூப், இறால் குழம்பு, இறால் ஃபிரை என பல்வேறு வகைகளில் இறால் உணவாக உட்கொள்ளப்படுகிறது.    இதன் சுவை பலருக்கும் பிடித்த ஒன்று, மீனில் இருப்பது போன்று முள் போன்ற எலும்புகள் இல்லை என்பதால் இன்னும் கூடுதல் சந்தோசம் தான் இதன் ருசி அறிந்தவர்களுக்கு. இது ருசி மட்டும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது. அதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இதயத்திற்கு நல்லது

இதய ஆரோக்கியத்திற்கு இறால் மிகவும் நல்லது. பெரும்பாலான கடல் உணவுகளைப் போலவே, இறாலிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் இதயம் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படாமல் தடுக்கிறது மற்றும் இருதயத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. வழக்கமாக இறால் இறைச்சியை உட்கொள்வது ஆரோக்கியமான இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

எலும்புகளுக்கு வலுவூட்டும்

இறாலில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. நம் உடலின் எலும்பு அமைப்பை மேம்படுத்த கால்சியம் மிகவும் அவசியம். உங்களுக்கு வலுவான எலும்புகள் மற்றும் வலுவான பற்கள் வேண்டுமென்றால், உங்களுக்கு நிறைய கால்சியம் தேவைப்படும். குறிப்பாக இளம் வயதினருக்கு கால்சியம் சத்து அவசியம் என்பதால் இறாலை தங்கள் உணவு வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

வைட்டமின் பி 12 நிறைந்தது

இறால் வைட்டமின் B12 இன் அற்புதமான ஆதாரமாக உள்ளது. உடலுக்கு போதுமான அளவு வைட்டமின் B12 கிடைப்பது முக்கியம். இந்த வைட்டமின் பற்றாக்குறை ஏற்பட்டால் தீவிர சோர்வு, இரத்த சோகை மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நீண்ட கால குறைபாடுகள் இருந்தால் மூளை பாதிப்பு ஏற்படக்கூடும்.

தசைகள் கட்டமைப்புக்கு உதவுகிறது

உடற்பயிற்சி மேற்கொள்பவர்களின் தசைகள் கட்டமைப்புக்கு உடலுக்கு புரதம் மிகவும் அவசியம். இறால்களில் போதுமான அளவு புரதம் உள்ளது. இறால்கள் புரதத்தின் ஆதாரமாக இருக்கும் அதே சமயத்தில் நல்ல விஷயம் என்னவென்றால், இதில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. ஒவ்வொரு 100 கிராம் இறால் இறைச்சியில் 17.0 கிராம் அளவிலான புரதம் உள்ளது. எனவே நன்கு இறுக்கமான தசை கட்டமைப்பைப் பெற இறாலை அடிக்கடி உணவு வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது நல்லது.

புற்றுநோய் வராமல் தடுக்கும்

உலகில் பெரும்பாலான இறப்புகள் பிக் சி, புற்றுநோய் போன்றவற்றால் ஏற்படுகின்றன. அதனால்தான் ஒவ்வொரு நபரும் அவர் உணவு வழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. புற்றுநோயை எதிர்த்துப் போராடும் உணவுகளை சாப்பிடுவது முக்கியம். புற்றுநோயைத் தடுக்க உதவும் உணவுகளில் இறால் இறைச்சியும் ஒன்றாகும். இதில் செலினியம் நிறைந்துள்ளது, இது புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கிறது.

இளமையைத் தக்கவைத்துக்கொள்ள உதவும்

வயதானலும் இளமையான தோற்றத்துடன் இருக்கவே நாம் ஆசைப்படுவோம். அப்படியென்றால் நீங்கள் இறால் இறைச்சியை உங்கள் அன்றாட உணவு வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இறாலிலிருந்து கிடைக்கும் வைட்டமின் E உங்கள் சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவும். அதே போல சருமம் மென்மையாகவும் அழகாகவும் இருக்க இந்த இறால் மிகவும் உதவியாக இருக்கும். வைட்டமின் E சுருக்கங்களை தடுக்கும் என்றும் ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிணம் செய்யப்பட்டுள்ளது.

அல்சைமர் நோயை எதிர்த்துப் போராட உதவும்

இன்று உலகளவில் பல முதியவர்களுக்கு ஏற்படும் மோசமான நோய்களில் அல்சைமர் நோயும் ஒன்றாகும். நம் குடும்பத்தில் அல்சைமர் நோயுடன் யாராவது இருந்தால் அது மிகவும் கொடுமையான விசஷயமாக இருக்கும். அவர்களுக்கு எல்லாமே மறந்து போய்விடும் என்பதால் உங்களைப் பற்றியும் கூட நினைவே இல்லாமல் போகக்கூடும். இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் கொழுப்பு அமிலங்கள் அல்சைமர் நோயை ஏற்படாமல் தடுக்க உதவும். உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

சரும அழகு மற்றும் ஆரோக்கியம்

இறாலில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும ஆரோக்கியத்தை சிறப்பாக மேம்படுத்த உதவியாக இருக்கும். இதில் துத்தநாகம் மற்றும் செலினியம் ஆகிய இரண்டு முக்கிய தாதுக்கள் உள்ளன. ஒருவரின் தோல் மிகவும் வறட்சியுடன் அல்லது எண்ணெய் பிசுபிசுப்புடன் காணப்பட்டால், அதை சரிசெய்ய இறால் இறைச்சி மிகவும் உதவியாக இருக்கும். இதனால் உங்கள் சருமம் அழகுடனும் பொலிவுடனும் மின்னும். இது வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்க உதவியாக என்பதால் சருமத்தில் காயம் ஏற்பட்டால் அதை குணப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும். 

நோய் எதிர்ப்பு சக்தி

இறாலில் உள்ள அதிக துத்தநாகம் நோயெதிர்ப்பு ஆற்றலை வலுவூட்டி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும். இது இறந்த செல்கள் மற்றும் திசுக்களுக்கு சிகிச்சையளிக்கிறது மற்றும் வெள்ளை இரத்த அணுக்கள் சீராக செயல்பட உதவியாக இருக்கும். 

Views: - 769

2

0