வெறும் இரண்டே பொருள் போதும் அற்புதமான வேர்க்கடலை லட்டு செஞ்சு அசத்தலாம்! | இதனால் என்னென்ன நல்லதெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

Author: Dhivagar
9 September 2021, 3:28 pm
Peanut Ladoo Recipe
Quick Share

தெரிய வேண்டும் என்பதில்லை. இதை அளவோடு எடுத்துக்கொண்டால் பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கும். இந்த வேர்க்கடையில் 100 கிராம் அளவை நாம் நம் உணவில் சேர்த்துக்கொள்வதால், நீரழிவு நோய் கட்டுப்படும், புற்றுநோய் ஆபத்து வராமல் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும், நினைவாற்றல் பெருகும், முடி உதிரும் பிரச்சினை தீரும், குழ்நதைகளின் வளர்ச்சிக்கு உதவும், சரும பொலிவிற்கு உதவியாக இருக்கும்.

இவ்வளவு நன்மைகள் நிறைந்த வேர்கடலையை, சட்னி, சுரைக்காய் கூட்டு, போன்றவற்றில் எல்லாம் சேர்த்து சமைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால், அதை விடவும் இதில் லட்டு செய்து சாப்பிட்டால் இன்னும் சூப்பராக இருக்கும். அது எப்படி என்று தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.  

வேர்க்கடலை லட்டுக்கு தேவையான பொருட்கள்

 • 1 கப் பச்சை வேர்க்கடலை
 • 1/4 கப் வெல்லம்
 • 2 டீஸ்பூன் நெய் 

வேர்க்கடலை லட்டு செய்வது எப்படி?

 • ஒரு கடாயை அடுப்பில் வைத்த மிதமான தீயில் அடுப்பை எரிய விடுங்கள். இப்போது வேர்க்கடலையை நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும்.
 • வேர்க்கடலையில் இருந்து தோல் பிரிந்தவுடன் தீயை அணைக்கவும். வேர்க்கடலை தோல் முழுமையாக நீக்கி விடவும்.
 • வேர்க்கடலையை நன்கு பொடி ஆக 5 முதல் 10 வினாடிகள் வரை அரைத்துக்கொள்ளவும். 
 • பிறகு நன்கு இடித்து பொடியான வெல்லத்தை இதில் சேர்க்கவும்.
 • வேர்க்கடலை மற்றும் வெல்லம் நன்கு கலக்கும் வரை மீண்டும் சில நொடிகள் அரைக்கவும். 
 • எல்லாவற்றையும் ஒரு தட்டிற்கு மாற்றி நெய் சேர்த்து நன்கு கலக்கவும். கடலையில் இருந்தே எண்ணெய் வெளியாகும் என்பதால் அதிகம் நெய் சேர்க்க வேண்டாம்.  
 • இப்போது உங்கள் கைகளால் சின்ன சின்ன கட்டிகளாக உருட்டிக்கொள்ளவும்.
 • உங்களுக்கு நெய் பிடிக்கவில்லை என்றால் வெல்லப்பாகு காய்ச்சி வேர்க்கடலைப் பொடியுடன் கலந்து கொள்ளலாம்.
 • இப்போது சிறு சிறு உருண்டையாக லட்டு பிடியுங்கள். இதை ஒரு காற்றுப்புகாத ஜாடியில் சேமித்து வைத்து சாப்பிடலாம்.

Views: - 209

0

0