வெயில் காலத்தில் பாரம்பரிய பானகம் குடித்தால் அவ்வளவு நல்லது! ஆனா எப்படி செய்யணும்?

24 June 2021, 10:03 pm
how to make traditional panagam
Quick Share

கோடைக்காலம் வந்து விட்டதால் சூரியனின் வெப்பம் அதிகமாக காணப்படும். எனவே உடலில் உள்ள சூட்டை தணித்து குளிர்ச்சி ஊட்டும் வகையில் பாரம்பரியமான பானகம் மற்றும் மோர் எப்படி கலக்குவது எப்படி என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

பானகம்:

வெல்லம்- 1/2 கப்

புளி- ஒரு துண்டு

ஏலக்காய் தூள்- 1/2 தேக்கரண்டி

சுக்கு- 1/2 தேக்கரண்டி

சாப்பிடும் கற்பூரம்- ஒரு சிட்டிகை

உப்பு- ஒரு சிட்டிகை

எலுமிச்சை பழம்- 1/2

மோர்:

தயிர்- 2 கப்

பச்சை மிளகாய்- 2

இஞ்சி- ஒரு துண்டு

சீரகம்- 1 தேக்கரண்டி

கருவேப்பிலை- ஒரு கொத்து

கொத்தமல்லி தழை- சிறிதளவு

பெருங்காயம்- ஒரு சிட்டிகை

எண்ணெய்- 1 தேக்கரண்டி

கடுகு- 1/2 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

பானகம்:

ஒரு பாத்திரத்தில் 1/2 கப் வெல்லம் எடுத்துக் கொள்ளலாம். அதில் இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைத்து ஆறிய பின் ஊற்றி கொள்ளுங்கள். வெல்லம் நன்றாக கரைந்த பிறகு ஒரு துண்டு புளியை பத்து நிமிடங்கள் ஊற வைத்து அந்த புளி தண்ணீரையும் கூடவே ஊற்றி விடுங்கள்.

புளிப்பு சுவை பிடிக்காதவர்கள் புளி சேர்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இப்போது 1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை சாப்பிடும் கற்பூரம் மற்றும் 1/2 தேக்கரண்டி சுக்கு சேர்த்து கலக்கவும். கூடவே 1/2 மூடி எலுமிச்சை சாற்றை ஊற்றி வடிகட்டி கொள்ளலாம். இதனை ஒரு மண்பானையில் ஊற்றி வைத்து பருகலாம். 

மோர்:

இரண்டு கப் கெட்டியான தயிரை எடுத்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். கட்டி எதுவும் இருக்கக் கூடாது. தயிருடன் மூன்று கப் தண்ணீர், இரண்டு நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு கொத்து நறுக்கிய கருவேப்பிலை மற்றும் சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கலக்குங்கள். 

சீரகம் மற்றும் இஞ்சியை லைட்டாக தட்டி சேர்த்து கொள்ளுங்கள். பிறகு தேவையான அளவு உப்பு போட்டு மோரை அப்படியே பருகலாம். ஒரு சிலருக்கு தாளித்தால் தான் பிடிக்கும். அதற்கு ஒரு வானலை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 1/2 தேக்கரண்டி கடுகு, ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம் போட்டு தாளித்து மோருடன் சேர்த்து பருகலாம்.

Views: - 127

0

0