WORK FROM HOME வேலை செய்றவங்களா, நீங்க? அப்ப இந்த 4 டிப்ஸை பாலோ பண்ணுங்க பாஸ்!

25 March 2020, 3:43 pm
work-from-home-updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் அதிவேகமாக   பரவிக் கொண்டு வருகிறது.  இந்நிலையில் பல்வேறு நிறுவனங்கள்   தங்கள் ஊழியர்களுக்கு, வீட்டிலிருந்தே   வேலை பார்க்குமாறு கூறியுள்ளது.

வீட்டில்   இருந்தே வேலை   பார்ப்பது நமக்கு  நல்ல ஓய்வாகவும், எளிமையாகவும்   இருந்தாலும் நாம் நொறுக்குத்தீனிகளை   தின்று கொண்டு வேலை செய்வதை தவிர்க்க  வேண்டும். இதனால் உங்களுக்கு உடல் நலம்   பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல், உடல் எடையும்   அதிகரிக்க செய்யும். சரி வீட்டில் இருந்து வேலை   பார்ப்பவராக இருந்தால், நீங்கள் பாலோ பண்ண வேண்டிய   சிம்பிள் டிப்ஸ் இங்கு தரப்பட்டுள்ளது.

health updatenews360

நிம்மதியான தூக்கம்:

வீட்டில்   தானே என்று   நீங்கள் கண்ட நேரத்தில்  தூங்கி, எழுப்புவதை தவிர்த்து   விடுங்கள். இது உங்கள் உடல் நலம்   மற்றும் மன நலத்தை பாதிக்கும். இரவு   முழுவதும் நீண்ட நேரம் வேலை பார்த்து   காலை நேரங்களில் அதிகமாக தூங்குவதை தவிர்த்து   விடுங்கள். இரவு தூக்கம் என்பது உங்களுக்கு அவசியமானது.  எனவே சரிவிகித உணவு உட்கொண்டு நிம்மதியான தூக்கத்தை நீங்கள்   பெற வேண்டும். சராசரி மனிதன் 8 மணி நேரம் தூங்குவது அவசியமானது.

 உணவு: 

நீங்கள்   வேலை பார்க்கும் போது அதிகளவில்   நொறுக்குத் தீனிகளை உண்பதை தவிர்த்து   விடுங்கள். தற்போது கொரோனா வைரஸ் பரவி   வருவதால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை   தரக் கூடிய உணவுகளை உண்பது அவசியமாகும். அதிகளவில்   ஊட்டச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவை   உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவது மட்டுமில்லாமல், உங்களை   சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

உடற்பயிற்சி: 

வீட்டிலிருந்தே   உடற்பயிற்சி செய்வது   உங்களுடைய உடல் ஆரோக்கியமாக இருக்க   உதவி புரிகிறது. சின்ன சின்ன விதமான உடற்பயிற்சிகளை செய்ய   நீங்கள் கண்டிப்பாக நேரம் ஒதுக்குவது அவசியமாகும். இதுவரை   நீங்கள் உடற்பயிற்சி செய்யாதவராக இருந்தாலும் பரவாயில்லை, இனிமேல் செய்து   உடலை பழக்கிக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வதால் உடலும், மனமும் ஆரோக்கியமாக   இருப்பது மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியும் எளிமையாக கிடைக்கும்.

திட்டமிடுதல்:

  • காலையில்   எழுந்தவுடனே   நீங்கள் அன்றைய   நாளில் என்ன வேலை   செய்யப் போகிறீர்கள் என்று திட்டமிட்டுக்  கொள்ளுங்கள். இது உங்களுக்கு வேலை செய்ய   எளிமையானதாக இருக்கும்.  
  • இதை  நீங்கள்   பாலோ செய்தால்  போதும், உங்கள் விடுமுறை   நாட்கள் இனிமையாக கழியும்.

Leave a Reply