தினமும் ஒரே மாதிரியான காலை உணவு எடுத்து கொள்வது நல்லதா…???

13 April 2021, 7:53 pm
Quick Share

தினமும் ஒரு நாள் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய வேலை இருக்காது என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருக்கலாம். அதே போல உங்கள் காலை உணவை நீங்கள் சரியாக எடுத்தால் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழலாம்.  ஆனால் உண்மையில் காலை உணவுக்கு பலரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இது நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று. 

காலை உணவுக்கு என்ன சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானிக்க சில  நிமிடங்கள் செலவழியுங்கள். இது உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

நீங்கள் தினமும் ஒரே காலை உணவை சாசாப்பிடுவது உண்மையில் பல நன்மைகளை தரும். ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும்  மார்க் ஜுக்கர்பெர்க் தினமும் ஒரே வகையான காலை உணவை தான் சாப்பிடுவார்கள் தெரியுமா..? ஏனென்றால் ஒவ்வொரு நாளும் என்ன அணிய வேண்டும் அல்லது காலை உணவுக்கு என்ன சாப்பிட வேண்டும் என்று யோசிக்காமல் இருப்பது உங்கள் மனதை மிக முக்கியமான விஷயங்களிலும், சாதிக்க வேண்டிய விஷயங்களின் பட்டியலிலும் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.

உங்கள் காலை உணவில் ஓட்மீல், ஆம்லெட் அல்லது ஒரு கப் ஃபிரஷான பழங்கள் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.  ஊட்டச்சத்து நிரம்பிய காலை உணவுகளே உங்கள் நாளைத் தொடங்குவதற்கான சிறந்த வழியாகும். மேலும் அவை நீண்ட நேரம்  உங்களுக்கு சக்தி அளிக்க உதவும். 

ஒவ்வொரு நாளும் ஒரே உணவை உட்கொள்வது உண்மையில் உடல் எடையை குறைக்க உதவும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் வித விதமாக சாப்பிடுவது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கலாம். ஆனால் தினமும் ஒரே உணவு எடுப்பது கலோரி உட்கொள்ளல் மற்றும் உடல் எடையைக் குறைக்கும். 

ஒவ்வொரு நாளும் ஒரே காலை உணவை சாப்பிட்டால் நீங்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டியது அவசியம் இருக்காது. வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள் என்பதை அறிந்து மிகவும் துல்லியமான மளிகைப் பட்டியலை வாங்கலாம். 

தினசரி அடிப்படையில் ஏதாவது செய்வது இறுதியில் ஒரு பழக்கமாக மாறுகிறது. இந்த உலகில் செழித்து வெற்றிபெற நல்ல பழக்கங்கள் தேவை.  உங்கள் உடல் மற்றும் மூளையை நல்ல பழக்கங்களுக்கு  மாற்றுவதில் இது உங்களுக்கு உதவும்.

Views: - 124

0

0