உச்சி முதல் பாதம் வரை நன்மை பயக்கும் சீத்தாப்பழம்!!!

Author: Hemalatha Ramkumar
9 October 2021, 9:54 am
Quick Share

பருவகால மற்றும் உள்ளூர் உணவுகளை சாப்பிடச் சொல்லி வல்லுநர்கள் எப்போதும் வலியுறுத்தி வருகின்றனர். ஆயினும்கூட, பலர் இதுபோன்ற உணவுகளை புறக்கணிக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் இதற்கு முன்பு அந்த உணவை முயற்சித்ததில்லை என்றால் அதனை அறவே தவிர்த்து விடுகிறார்கள். இருப்பினும், நீங்கள் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய ஒரு பழம் சீதாப்பழம் அல்லது கஸ்டர்ட் ஆப்பிள் ஆகும். இது இலையுதிர் காலத்தில் பரவலாகக் கிடைக்கிறது. பச்சை நிற, கூம்பு வடிவ பழம் அன்னாசி மற்றும் வாழைப்பழம் போன்ற ஒரு இனிமையான சுவை கொண்டது.

இது மகாராஷ்டிராவில் பரவலாக வளர்க்கப்படுகிறது.
நீங்கள் ஏன் சீத்தாப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான சில காரணங்களை இப்போது பார்க்கலாம்.

சீத்தாப்பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் ஆக்குகிறது. இப்பழம் வைட்டமின் B6 இன் நல்ல ஆதாரம். அதை சாப்பிடுவது வீக்கம் மற்றும் PMS (மாதவிடாய் முன் நோய்க்குறி) குணப்படுத்த உதவும். நீரிழிவு அல்லது இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளால் நீங்கள் அவதிப்பட்டால், இந்த பழம் உங்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும். அதிக உணவு நார்ச்சத்து நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும். அதே வேளையில், அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

முக்கியப் பலன்கள்:
*உங்கள் மனநிலையையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது
*அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிரம்பியுள்ளன
*கண் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்
*இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
*அஜீரணத்தை குணப்படுத்த உதவுகிறது
*புற்றுநோய் எதிர்ப்பு கூறுகள் இருப்பதாக நம்பப்படுகிறது
*புண்கள் மற்றும் அமிலத்தன்மையை தடுக்கிறது
*மென்மையான சரும நிறத்தை கொடுக்கும் நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன
*கண் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த அறியப்படுகிறது
*ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது
*ஒபேசோஜெனிக் எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் காட்டும் பயோஆக்டிவ் மூலக்கூறுகள் உள்ளன.

சீத்தாப்பழத்தை எப்போது சாப்பிட வேண்டும்?
*உணவுக்குப் பிறகு ஒருபோதும் பழங்களை சாப்பிட வேண்டாம்
*உணவுடன் பழங்களை சாப்பிட வேண்டாம்
*காலை 11 அல்லது மாலை 4 மணிக்கு ஒரு சிற்றுண்டி போல பழத்தை சாப்பிடுங்கள்
*பழங்களை மற்ற உணவோடு இணைக்க தேவையில்லை. ஒரு நேரத்தில் ஒன்று சாப்பிடுங்கள்
*பழச்சாறு வடிவில் பழங்களைத் தவிர்க்கவும். சிறந்த நன்மைகளைப் பெற அவற்றை முழுமையாகச் சாப்பிடுங்கள்.

Views: - 575

0

0