உலக பார்வை தினம் 2021: கூர்மையான கண் பார்வைக்கு உதவும் மூலிகைகள்!!!

Author: Hemalatha Ramkumar
13 October 2021, 10:56 am
Quick Share

காலையில் இருந்து இரவு தூங்கும் வரை நம் கண்களை நாம் படுத்தும் பாடு சொல்லில் அடங்காது. எந்நேரமும் மொபைல் அல்லது லேப்டாப் ஸ்கிரீனை பார்த்து கொண்டிருக்கும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் நம் கண்களுக்கும் ஓய்வு தேவை. ஆச்சரியப்படுவதற்கில்லை, இன்று கண்ணாடி மற்றும் காண்டாக்ட் லென்ஸ் அணிந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் அவற்றை அணிய யாரும் விரும்புவதில்லை என்பது உண்மை. எனவே, நாம் என்ன செய்யலாம்? எப்போதும்போல, இயற்கையான தீர்வுகளைத் தேடுவோம். உலக பார்வை தினமான இன்று கண்பார்வையை மேம்படுத்தும் சில மூலிகைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

1. ஜின்கோ பைலோபா (Ginkgo Biloba):
இது கண்பார்வையை மேம்படுத்துவதற்கான சிறந்த ஆயுர்வேத வைத்தியங்களில் ஒன்றாகும். இது பார்வையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், கிளௌகோமா மற்றும் மாகுலர் சிதைவிலிருந்து உங்களை பாதுகாக்கிறது. ரெட்டினோபதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது வேலை செய்யும் என்று சில ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இது குழந்தைகள் அல்லது நீரிழிவு நோயாளிகளுக்கு இல்லை!

2. காட்டு அஸ்பாரகஸ் (Wild Asparagus):

இது பார்வையை மேம்படுத்த உதவுகிறது. மேலும் உங்களுக்கு பளபளப்பான மற்றும் பிரகாசமான கண்களையும் தருகிறது! ஒரு தேக்கரண்டி காட்டு அஸ்பாரகஸை சிறிது தேனுடன் கலந்து, தினமும் ஒரு கப் வெதுவெதுப்பான பசும்பாலுடன் பருகவும். இந்த பழக்கத்தை சில மாதங்கள் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரு பெரிய வித்தியாசத்தைக் காண்பீர்கள்!

3. ஐ பிரைட் (Eye bright):
இந்த மூலிகை கண் பார்வையை மேம்படுத்த பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்படுகிறது. உண்மையில், உங்கள் கண்களுக்கு நன்மை பயக்கும் பெரும்பாலான பொருட்கள் அல்லது உணவுகள் இதனை முதன்மைப் பொருளாகக் கொண்டுள்ளன.

4. பில்பெர்ரி (Bilberry):

இந்த மூலிகையில் ப்ளூபெர்ரி மற்றும் கிரான்பெர்ரி போன்ற அந்தோசியனின்கள் எனப்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற ஃபிளாவனாய்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது. உண்மையில், இரண்டாம் உலகப் போரின்போது, ​​ராயல் ஏர் ஃபோர்ஸ் விமானிகள் பில்பெர்ரி ஜாம் சாப்பிட்டனர். இது அவர்களின் இரவு பார்வையை மேம்படுத்த உதவியது. உண்மையில், மற்றொரு ஆய்வில், மற்றொரு பெர்ரியிலிருந்து வரும் அந்தோசயனின்ஸ் கண் சோர்வைக் குறைக்க உதவுகிறது.
(குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூலிகைகள் கண் பார்வையை மேம்படுத்துவதற்காக அறியப்பட்டாலும் மருத்துவ மேற்பார்வையில் தான் இதனை பயன்படுத்த வேண்டும்.)

Views: - 208

0

0

Leave a Reply