நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலையில் முதல் வேலையா இத பண்ணுங்க!!!
Author: Hemalatha Ramkumar20 January 2022, 3:47 pm
ஒரு சிலர் 7-8 மணிநேரம் தூங்குகினாலும், காலையில் வலி மற்றும் சோர்வுடன் காணப்படுவார்கள். நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்து, அது ஏன் என்று நினைத்து கவலைபட்டுக் கொண்டு இருந்தால் நீங்கள் சரியான இடத்தில் உள்ளீர்கள்.
உங்கள் நாளைத் தொடங்குவதற்கான ஒரு நல்ல வழி, விழித்தெழுந்த பிறகு உங்கள் உடலை உறுதிப்படுத்த உதவும் சில எளிய நீட்டிப்பு பயிற்சிகளைச் செய்வதாகும். ஒவ்வொருவரும் உகந்த ஆரோக்கிய நலன்களுக்காக சில நீட்டிப்புகளை முயற்சி செய்து இணைக்க வேண்டும்.
காலையில் நீட்டிப்பு பயிற்சி செய்வதன் முக்கிய நன்மைகள்:
நெகிழ்வுத்தன்மை, மன அழுத்தம் மற்றும் வலி போன்ற பிரச்சனைகளை போக்க நீட்டிப்பு பயிற்சி உதவுகிறது.
◆மன அழுத்த நிவாரணி:
காலை எழுந்தவுடன், நாம் வழக்கமாக அந்த நாளைப் பற்றி கவலைப்படத் தொடங்குகிறோம். ஆனால், முதலில் உங்கள் முழு உடலையும் நீட்டி பயிற்சி செய்வதில் கவனம் செலுத்துங்கள்.
◆உங்கள் உடல் இயக்கத்தை அதிகரிக்கிறது:
நீட்டிப்பு பயிற்சி உங்கள் தசைகளை நெகிழ்வாக வைத்திருக்கும். வளைந்து கொடுக்கும் தன்மை மூட்டுகளில் சிறந்த அளவிலான இயக்கத்திற்கு உதவுகிறது.
◆வலியை குறைக்கிறது:
காலையில் நீட்டிப்பு பயிற்சி செய்வது உங்கள் மூட்டுகள் மற்றும் தசைகளில் உள்ள வலிகளை முடிவுக்குக் கொண்டுவர உதவும்.
◆பின் முதுகு வலியை குறைக்கிறது:
நீண்ட நேரம் உட்கார்ந்த பிறகு கீழ் முதுகில் உள்ள தசைகள் சுருக்கப்படும். எனவே, உங்கள் நாளை நீட்டிப்பு பயிற்சியுடன் தொடங்குங்கள்.
◆தோரணை:
வழக்கமான நீட்டிப்பு பயிற்சியானது தோரணையை மேம்படுத்த உதவுகிறது.
0
0