பணியிடங்களில் உங்களுக்கு ஏற்படும் தலைவலியைப் போக்க உதவும் விரைவான மற்றும் எளிதான வீட்டு வைத்தியங்கள்

By: Dhivagar
7 September 2021, 11:52 am
quick and easy home remedies for headaches
Quick Share

நமது பரபரப்பான வாழ்க்கையில் சிந்திக்கவும் கூட நேரம் இல்லாமல் பூமியை விட வேகமாக சுழன்று கொண்டு இருக்கிறோம். வாழ்வில் நமக்கான பல்வேறு தேவைகளின் காரணமாக நாம் சுழலும் வேளையில் நம் உடலும் நம்முடன் ஒத்துழைத்தால் மட்டுமே நம்மால் மேலும் உற்ச்சாகத்தோடு இயங்க முடியும். 

நம் உடலில் ஏதேனும் சிக்கல் ஏற்படப்போகிறது என்பதை நமக்கு உணர்த்தும் முதல் அறிகுறி தலைவலி தான். வேலைக்குச் செல்லும்போதே தலைவலிக்கு மாத்திரை மருந்துகளையும் பல பேர் கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர். பணியிடங்களில் ஏற்படும் வேலைப்பளு, குடும்ப பிரச்சினைகள் என பல்வேறு காரணங்களினால் நமக்கு சிக்கல்கள் உண்டாகக்கூடும். 

தலைவலி வராமல் தடுக்கவும், விரைவாக தலைவலியை குணப்படுத்தவும் உதவும் சில வீட்டு வைத்தியங்களை நாங்கள் உங்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம். இவற்றை நீங்கள் செய்தாலே தலைவலி இன்றி நிம்மதியாக இருக்கலாம்.

நீரேற்றத்துடன் இருங்கள்

தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு பொதுவான காரணங்களில் ஒன்று நம் உடலில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை தான். உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்வது உடல் ஆரோக்கியமாக இருக்க மிகவும் உதவியாக இருக்கும். எனவே, உங்களை நன்கு நீரேற்றமாக வைத்திருக்க ஃபிரெஷ் ஜூஸ், தண்ணீர், தேங்காய் நீர் உள்ளிட்ட ஏராளமான திரவங்களை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். தேநீர் மற்றும் காபி போன்ற காஃபின் அதிகம் உள்ள பானங்களை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் இந்த பானங்கள் நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

சீரான உணவு வழக்கத்தைப் பின்பற்றுங்கள்

 • நம் உடலுக்கு அனைத்து வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் மிகவும் அவசியம். 
 • மேலும் அத்தியாவசிய ஊட்டச்சத்து குறைபாடு நம் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். 
 • எனவே, சீரான உணவு வழக்கத்தைக் கடைபிடிப்பது மிகவும் முக்கியம். ஒருவர் சரியான நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும், ஏனெனில் உணவை எடுத்துக்கொள்ளாமல் தாமதப்படுத்துவது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.
 • நமது மூளையின் சரியான செயல்பாட்டிற்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறது மற்றும் குளுக்கோஸ் இல்லாதிருப்பது இரத்தச் சர்க்கரைக் குறைபாட்டை ஏற்படுத்தும், இதன் விளைவாக தலைவலி ஏற்படுகிறது. 
 • எனவே, சரியான மற்றும் ஆரோக்கியமான உணவு வழக்கத்தை பின்பற்றுங்கள் மற்றும் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க சீரான உணவு முறை என்பது மிகவும் முக்கியம்.

நிம்மதியான தூக்கம் வேண்டும்

 • தலைவலி ஏற்படாமல் தடுக்கவும், உடல்நலக்குறைபாடு ஏற்படாமல் இருக்கவும் மற்றொரு பயனுள்ள வழி தினமும் இரவில் 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டும். 
 • தூக்கமின்மை உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை சீர்குலைக்கும் மற்றும் பல்வேறு நோய்கள் உண்டாக வழிவகைச் செய்யும். 
 • தூக்கமின்மை காரணமாக நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம், இதனால் உங்கள் தலையில் பயங்கரமான வலி உண்டாகக்கூடும். எனவே சரியான அளவு தூக்கமும் கிடைப்பது உடலுக்கு மிகவும் முக்கியம்.

ஓய்வு

 • நீங்கள் மனஅழுத்தமாக உணர்ந்தாள் அல்லது ஆற்றல் இழந்து காணப்பட்டால், சிறிது நேரம் கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டும். 
 • இது உங்கள் உடலில் இருந்து பதற்றம் மற்றும் அழுத்தத்தை வெளியேற்ற உதவுகிறது மற்றும் தலைவலியைத் தடுக்க உதவுகிறது. 
 • தலைவலி ஏற்படும் சமயத்தில் உடல் ரீதியான நேரடி செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.

தலையில் மசாஜ்

தலையில் மசாஜ் செய்வது தலைவலியைக் குறைக்க உதவியாக இருக்கும். மென்மையான கைகளால் மசாஜ் செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக தலைவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். உங்கள் தலையில் மசாஜ் செய்யும்போது இறுக்கமான தசைகள் தளர்வடையும் என்பதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் உங்கள் தலைவலி குறையும்.

எண்ணெய் தேய்த்து குளிக்கலாம் 

உடல் சூடாவதன் காரணமாக கூட தலைவலி ஏற்படக்கூடும். எனவே தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதுவும் தலைவலியைக் குறைக்க மற்றொரு பயனுள்ள வழியாக இருக்கும். இப்படி செய்வதன் மூலம் தசை இறுக்கம் தணிந்து இரத்த ஓட்டம் மேம்படுத்தப்படும்.

சிரித்து பேசுங்கள்

தலைவலி பொதுவாக மன அழுத்தம் மற்றும் பதற்றத்தின் காரணமாகவே ஏற்படுகிறது. சிறிய தலைவலியாக இருந்தால், சாதரணமாக நீங்கள் உங்கள் நண்பர்களோடு சிரித்து பேசினாலே சரியாகிவிடும். சிரித்து பேசுவதனால் ‘ஃபீல்-குட்’ ஹார்மோன்கள் உங்கள் மூளையில் உள்ள இரசாயனங்களை வெளியிடும், இது தலைவலியை குணப்படுத்த உதவும்.

அமைதியாக இருங்கள்

ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உங்கள் உடலுக்கு ஓய்வு தேவை. லேசான தலைவலிக்கு தசைகளில் தளர்வு ஏற்பட்டு மற்றும் பதற்றம் தணிந்தாலே தானாக சரி ஆகிவிடும். தலைவலி உண்டானால் கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் ஓய்வெடுக்க முயற்சி செய்யுங்கள்.

ஆழந்து சுவாசிக்கவும்

மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை போக்க இந்த நுட்பம் மிகவும் சிறந்தது. ப்ரெஷான காற்றினை சுவாசிக்கும்போது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.

Views: - 220

0

0

Leave a Reply