நீங்கள் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இதெல்லாம் செய்கிறீர்களா? இனிமேல் செய்யாதீங்க !

14 February 2020, 2:58 pm
stomach updatenews360
Quick Share

காலையில்   எழுந்து நாம்   சில விஷயங்களை பாலோ   செய்வோம். ஆனால் நாம் வெறும்வயிற்றில்  செய்யவே கூடாத சில விஷயங்கள் உள்ளன. நாம்  வயிற்றில் கொஞ்சம் கூட சாப்பிடாமல் சில விஷயங்களை பின்  தொடரக் கூடாது. அவற்றை செய்யும் போது நமக்கு பின்விளைவுகள் ஏற்படுகின்றன.  அதை பற்றி இங்கு பார்க்கலாம்.

மருந்துகள் :

வெறும்  வயிற்றில்  நீங்கள் மருந்து  உண்ணக்கூடாது. அதிலும் குறிப்பாக   அண்டி- இன்ஃபிலாமேட்ரி மருந்துகளை எடுக்கக் கூடாது. உணவுக்கு முன்  அதை உட்கொண்டால் வயிற்றில் புண் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆல்கஹால் :

வெறும்  வயிற்றில்  ஆல்கஹால் நீங்கள் உட்கொள்ளக்கூடாது. அதையும்  மீறி நீங்கள் மதுஅருந்தினால் உங்கள் உடலில் ஆல்கஹால் அதிகளவு  கலந்துவிடும். இதனால் இதயம் மற்றும் கல்லீரல் அதிக அளவு பாதிக்கப்படும்.  சிறுநீரகம் செயலிழக்க வாய்ப்புள்ளது.

முடிவு  எடுத்தல்:

நீங்கள்  வெறும் வயிற்றில்   இருக்கும் பொழுது முடிவுகள் எடுக்கக்   கூடாது. அப்படி எடுத்தால் நீங்கள் பின் நாட்களில்   மிகவும் வருத்தப்படுவீர்கள். 

உடற்பயிற்சி:  

நாம்  வெறும் வயிற்றில்   இருக்கும் போது உடற்பயிற்சி   எடுத்தலை தவிர்க்க வேண்டும். காரணம்   நம் உடல் வெறும் வயிற்றில் மிகச்சோர்வாக  இருக்கும்.இதனால் நாம் உடற்பயிற்சியை மிகுந்த நேரம் பின் தொடர  முடியாது. 

வாதங்களை   தவிர்த்தல் :

பசியுடன் இருக்கும்   வேலையில் நீங்கள் கடுமையான  கோபத்துடன் இருப்பீர்கள். அந்த   சமயத்தில் மற்றவர்களிடத்தில் நாம்   வாதங்கள் செய்யக்கூடாது. பிறரிடம் வாக்கு  தருவதை தவிர்த்தல் நல்லது. பிற்காலங்களில் நாம் அதை  நினைத்து வருத்தப்படுவதுண்டு. அந்த நேரங்களில் உங்களிடம் குறைவான  எனர்ஜி இருப்பதால் உங்களால் சரியாக விவாதம் செய்ய முடியாது.

சுவிங்கம்  உண்ணக் கூடாது :

வெறும் வயிற்றில்   நீங்கள் சுவிங்கம்  உண்பதை தவிர்த்தல் நல்லது. காரணம்  அது நம் வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்த  செய்யும். உங்களால் உணவு உட்கொள்ள முடியாது.  10 நிமிடங்களுக்கு மேல் சுவிங்கம் மெல்வதை தவிர்த்தல்   உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும் செயல்முறையாகும்.

மேற்கூறிய விஷயங்களை நீங்கள் உணவு உண்ணாமல் எதையும் பின்தொடரக் கூடாது. அது உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.

Leave a Reply