100க்கு அழைக்க வேண்டாம் காவல்துறை கோரிக்கை: என்ன காரணம்?

22 May 2020, 11:14 pm
Quick Share

கோவை: பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக 100 மற்றும் 112 ஆகிய அழைப்புகளை அழைக்க வேண்டாம் என்றும், மாற்று எண்களை அழைக்குமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு பின்வருமாறு:- பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்டெல், வோடாபோன், ஐடியா மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களின் கைபேசியில் இருந்து காவல் அவசர அழைப்பு எண் 100 மற்றும் 112 ஆகிய அழைப்புகளை காவல் கட்டுப்பாட்டு அறையில் பெறுவதில் இடர்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தற்காலிகமாக 044 41600100 மற்றும் 044 71200100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.