பணியின்போது இறந்த காவலரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கல்…

16 May 2020, 6:16 pm
Quick Share

கிருஷ்ணகிரி: ஒசூரில் பணியின்போது இறந்த காவலரின் குடும்பத்திற்க்கு தமிழக அரசின் நிவாரண நிதியான 50 லட்ச காசோலையை காவல்துறை ஜ.ஜி. வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எல்லை பகுதியில் உள்ள ஓசூர் ஜிஜிவாடி,சோதனை சாவடியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து தலைமை காவலர் சேட்டு லாரி மோதி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு நிவாரண நிதி 50 லட்சத்துக்கான காசோலையை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா உயிரிழந்த தலைமை காவலரின் மனைவியிடம் இன்று வழங்கினார்.

மேலும் சேட்டுவின் குடும்பத்தினருக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, சேலம் சரக காவல்துறை துணை தலைவர் பிரதீப்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் ஆகியோர் நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.