கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட நபர் கழுத்து அறுத்து கொலை

19 July 2020, 8:22 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட நபரை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலப்பந்தல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காப்பு காட்டில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அதில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் ரெட்டியார் பாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் மேனோஜ் குமார் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் தொடர்ந்து நடத்திய விசாரணையில், இரு சக்கர வாகனம் வாங்கி தருவதாக மனோஜ் குமாரிடம் இருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மரூர் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் 8,000 ரூபாய் பணம் வாங்கியதாகவும், அன்றைலிருந்து பணத்தையும் திரும்ப தராமல் வாகனத்தையும் வாங்கி தராமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பணத்தை வாங்கி வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற மனோஜ் வீடு திரும்பாததை அடுத்து பெற்றோர் மற்றும் உறவினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். பின்னர் ஸ்டீபன் என்பவருக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது தன்னை பார்க்க வரவில்லை என கூறியுள்ளார். இதை தொடர்ந்து மனோஜை அவரது உறவினர்கள் காலை வரை தேடியுள்ளார். இந்த நிலையில், மாடம்பூண்டி பகுதியில் உள்ள காப்புகாட்டில் மனோஜ் சடமாக மீட்கப்பட்டார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், ஸ்டீபனின் விசாரணை நடத்தியதில், முதலில் மறுத்துள்ளான். அப்போது வனக்காவலர் பழனிவேலிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் நேற்று இரவு மது போதையில் இருந்த மனோஜை வீட்டிற்கு அனுப்ப முயன்ற போது, அங்கு வந்த ஸ்டீபன், மனோஜை தனது தம்பி எனக்கூறி அழைத்து சென்றதாக தெரிவித்தார். இதையறிந்த மனோஜின் உறவினர்கள் விசாரணைக்கு அழைத்து வந்த ஸ்டீபனை தர்ம அடி கொடுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஸ்டீபனை மீட்ட போலீசார் நடத்திய விசாரணையில், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதற்கு மனோஜை மதுவாங்கி கொடுத்து கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.