ஊழியரை தகாத வார்த்தையால் திட்டிய உரிமையாளர்… ஊழியர் எடுத்த விபரீத முடிவு….

22 June 2020, 5:21 pm
Quick Share

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டையில் அரிசி ஆலை உரிமையாளர் ஊழியரை தாகாத வார்த்தையில் திட்டியதால் மனமுடைந்த ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊத்துக்கோட்டையில் தனியார் அரிசி ஆலையில் பணிபுரிந்து வரும் செல்லையா என்பவர் தனது சொந்த வேலை காரணமாக அரசி ஆலை உரிமையாளர் பால சுப்பிரமணியின் இருசக்கர வாகனத்தை எடுத்து செல்லும் போது தடை உத்தரவை மீறி சுற்றி திரிந்தகாக கூறி ஊத்துக்கோட்டை காவல்துறையினர் அவரை மடக்கி வழக்கு பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனால் இச்சம்பவம் குறித்து அவர் தனது உரிமையாளர் பாலசுப்பிரமணியிடம் கூறிய போது,

தன்னை அவர் தரக்குறைவாக பேசி திட்டியதால் அங்கிருந்து தனது செஞ்சியகரம் கிராமத்திற்கு சென்று தன் நண்பர்களிடமும் குடும்பத்தினரிடம் பேசி விட்டு பின்னர் மிகுந்த மன உளைச்சலில் இருந்த செல்லையா தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். பின்னர் தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால் அவர் தூக்கு கயிற்றிலேயே உயிரிழந்தார்.

பின்னர் இந்த சம்பவம் தெரிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பாலசுப்பிரமணியனை தேடி வருகின்றனர். இறந்தவருக்கு மூன்று பிள்ளைகள், மனைவி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடயே அவர் தான் நண்பரிடம் தன்னை முதலாளி தகாத வார்த்தையில் திட்டியாதகவும்,

இன்று மாலைக்குள் உயிர்இழந்து விடுவேன் என்று கூறிய ஆடியோ வெளியானதால் அப்பகுதியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் முழு ஊராடங்கு இல்லாத போதிலும் காவல்துறை வீணாக சாலையில் சுற்றி திரிபவரை விட்டுவிட்டு வேலைக்கு சென்றவரின் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால் ஒரு உயிர் போகும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் அவரின் குடும்பம் நிற்கதியாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.