பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவர் சிறையில் அடைப்பு….

23 June 2020, 4:45 pm
Quick Share

திருவள்ளூர்: மீஞ்சூர் பகுதிகளில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட வந்த இரண்டு குற்றவாளிகளை பொன்னேரி கோட்டாட்சியர் உடனடியாக தண்டனை வழங்கி புழல் சிறையில் அடைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் நேதாஜி ஆகிய இருவர் மீதும் பல கொலை, கொலை முயற்சி வழக்குகள் மற்றும் வழிப்பறி கொள்ளை வழக்குகள் உள்ள நிலையில், இருவரும் கொண்டகரை மற்றும் சீமாவரம் பகுதிகளில் பணம் கேட்டு மிரட்டி அச்சுறுத்தியும், வழிபறியும் செய்தால் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், இவர்களை பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர் செய்யப்பட்டு குற்றம் நிரூபணம் ஆனதால் இவர்களுக்கு முறையே ராஜ்குமார் என்பவருக்கு 4 மாத காலத்திற்கும், நேதாஜி என்பவருக்கு 6 மாத காலத்திற்கும் தண்டனை வழங்கியதால் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரும் எந்தவித குற்ற செயல்களிலும் ஈடுபடமாட்டோம் என ஏற்கனவே பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆறு மாத காலத்திற்கு எவ்வித குற்ற செயல்களிலும் ஈடுபட மாட்டோம் என பிரமாண பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்துள்ளநிலையில், தற்போது குற்றசம்பவத்தில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளது குறிப்பிடதக்கது.