தெப்பக்குளத்தில் மதுபோதையில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…

23 May 2020, 10:02 pm
Quick Share

காஞ்சிபுரம்: சங்கரமடத்தின் மகா பெரியவர் மணிமண்டபத்தில் உள்ள தெப்பக்குளத்தில் நண்பர்களுடன் மதுபோதையில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட மாகாளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பூபதி இவருடைய மகன் தினேஷ் எலக்ட்ரிகல் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தனது நண்பர்கள் மூன்று பேருடன் காஞ்சிபுரம் அடுத்துள்ள ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள சங்கரமடத்தின் மகாபெரியவர் மணிமண்டபம் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் மதுபோதையில் தினேஷ் குளித்துள்ளார்.

அப்போது ஆழமான பகுதியிலுள்ள நீரில் மூழ்கி தினேஷ் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மணிமண்டபத்தின் நிர்வாகிகள் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.