நோய்களை எல்லாம் துரத்தி அடிக்கும் அம்பரலங்காய் ஜூஸ்! கிடைச்சா மிஸ் பண்ணிடாதீங்க! Ambarella fruit benefits

27 May 2021, 9:17 am
ambarella fruit benefits
Quick Share

ஆயுர்வேத சிகிச்சை முறையில் அம்பரலங்காய் என்பது மிக முக்கியமான ஒன்று என சொல்லலாம். இந்த அம்பரலங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இந்த மரத்தின் இலைகள், பட்டை என எல்லாமே மருத்துவ ரீதியாக பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

வயிற்றுப்போக்கு, தொண்டை புண், இருமல், கண் தொற்று, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு எல்லாம் தீர்வளிக்க இந்த அம்பரலங்காய் பயன்படுகிறது.

அம்பரலங்காயில் வைட்டமின் A அதிகமாக உள்ளது. இது கண் பார்வை திறனை மேம்படுத்துகிறது. இந்த அம்பரலங்காய் மரத்தின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் சாறு கண் ஒவ்வாமைகளுக்கு கண் சார்ந்த பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

அம்பரலங்காயில் அதிக அளவு வைட்டமின் C உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பைகுறைத்து வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.

செரிமானத்தைத் தூண்டும் நார்ச்சத்து இருப்பதால் அஜீரணம் மற்றும் செரிமானம் சார்ந்த பிரச்சினைகளை அம்பரலங்காய் குணப்படுத்துகிறது.

உடலில் ஏற்படும்  நீரிழப்புப் பிரச்சினையைச் சரிசெய்யும் திறன் இந்த அம்பரலங்காய்க்கு உண்டு.

இதில் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் கலோரிகள் குறைவாகவே உள்ளன. ஆனால், இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே, இந்த பழம் அதிக உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.

இது உடல் செல்களை நச்சுகள் மற்றும் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் சரும பாதிப்பு ஏற்படாமல் தடுத்து இளமை தோற்றத்தை நீடிக்கச் செய்து சருமத்திற்குப் பொலிவைத் தருகிறது.

இந்த பழத்தில் உள்ள வைட்டமின் C உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

இதிலிருக்கும் வைட்டமின் B1 சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. இது உடலில் இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதன் மூலம் உடல் முழுவதும் ஆக்ஸிஜனின் ஓட்டத்தைத் தூண்டுகிறது.

அம்பரலங்காய் இருமலுக்கு ஒரு சிறந்த மருந்து என்று ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது. தொண்டை புண்ணைக் குணமாக்கி குரலில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்கிறது.

Views: - 207

0

0