உஷ்ஷ்ஷ்… பெண்களே… உங்கள் ஆண் நண்பரிடம் சொல்லவே கூடாத ஐந்து விஷயங்கள்!!!!

23 May 2020, 6:18 pm
avoid telling these to your male partner
Quick Share

எந்த ஒரு உறவிலும் நேர்மையாக இருப்பது அவசியம். அதே போல ஒளிவு மறைவு இல்லாமல் இருக்கும் போது அந்த உறவுக்குள் அடிக்கடி சண்டைகள் ஏற்படுவது குறையும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி தாங்கள் நினைப்பதை கூறுவது, உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை பகிர்வது ஆகியவற்றை செய்து வருதல் நலம். ஆனால் இதுவே உங்கள் ஆண் நண்பரிடம் ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. இது சற்று வினோதமாக தெரிந்தாலும் ஒரு சில விஷயங்களை பெர்சனலாக வைத்து கொள்வது சிறந்தது. அப்படி என்னென்ன விஷயங்களை நீங்கள் உங்கள் ஆண் நண்பரிடம் சொல்ல கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

◆உங்கள் சமூக வலைத்தளங்களின் பாஸ்வெர்டுகளை சொல்ல சொல்லி பல முறை உங்கள் ஆண் நண்பர் உங்களிடம் கேட்டிருக்கலாம். அதே போல உங்கள் போன் மற்றும் லேப்டாப் பாஸ்வெர்டையும் தெரிந்து கொள்ள முயற்சி செய்திருக்கலாம். நீங்கள் அவரை நம்புகிறீர்கள் என்பதை நிரூபிக்க பாஸ்வெர்டு கொடுக்க வேண்டிய அவசியம் துளியும் இல்லை. அதற்கு பதிலாக அவரிடம் பொறுமையாக எடுத்து கூறலாம். பாஸ்வெர்டை இரகசியமாக வைத்து கொள்வதினால் நீங்கள் அவரை ஏமாற்றுகிறீர்கள் என்ற அர்த்தம் கிடையாது.

◆உங்கள் ஆண் நண்பரின் குடும்பம் மற்றும் நண்பர்களை பற்றி பாராட்டும்  விதமாக கூறுவது நல்ல விஷயம் தான். ஆனால் ஒரு வேலை உங்களுக்கு அவரது நண்பரை பிடிக்கவில்லை என்றால் அதை பற்றி அவரிடம் கூறுவதை தவிர்த்திடுங்கள். அவர் நண்பரின் நடத்தை குறித்து எப்போதும் குறை கூறுவதை செய்யாதீர்கள். இதற்கு பதிலாக அவரது நண்பர்களுடன் நேரம் செலவழிப்பதை தவிர்க்கலாம்.

◆உங்கள் ஆண் நண்பரிடம் உங்கள் பழைய ஆண் நண்பரை பற்றி கூறுவதை அறவே செய்யாதீர்கள். உங்கள் பழைய உறவில் இருந்த நல்ல தருணங்கள் பற்றி கூட கண்டிப்பாக பேச கூடாது. கடந்த காலத்தை பற்றி உங்கள் ஆண் நண்பரிடம் அனைத்தையும் கூற வேண்டும் என்று நீங்கள் நினைப்பது சரி தான். ஆனால் உங்கள் பழைய உறவை பற்றி கேட்பதை உங்கள் ஆண் நண்பர் விரும்பமாட்டார். 

◆உங்கள் உறவை பற்றி பலருக்கு பல விதமான எண்ணெங்கள் இருக்கும். உங்களை பற்றியும் உங்கள் ஆண் நண்பரை பற்றியும் குறை கூறுவதற்கென்றே ஒரு சிலர் இருப்பர். அவர்கள் கூறும் எதிர்மறையான கருத்துக்களால் மனமுடைந்து இதனை பற்றி உங்கள் ஆண் நண்பரிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிலரின் கருத்து உங்கள் உறவை மேம்படுத்தும் என நீங்கள் நினைத்தால் பிறகு தாராளமாக இதை பற்றி உங்கள் ஆண் நண்பரிடம் பேசலாம்.

◆உங்கள் அழகு குறித்து நீங்கள் செய்யும் தினசரி வேலைகளை உங்கள் ஆண் நண்பரிடம் சொல்ல வேண்டிய கட்டாயம் கிடையாது. உதாரணமாக நீங்கள் பேஸ் பேக் போடுவதையோ அல்லது கிலென்சர் பயன்படுத்துவதையோ அவரிடம் சொல்ல வேண்டாம். ஒரு வேலை இதை பற்றி தெரிந்து கொள்ள அவர் ஆர்வமாக இருக்கும் பட்சத்தில் தாராளமாக கூறுங்கள்.

Leave a Reply