முதுகு வலி தான் உங்க பிரச்சினையா? கவலைய விடுங்க! இந்த வீட்டு வைத்தியம் ட்ரை பண்ணுங்க

Author: Dhivagar
1 July 2021, 10:41 am
back pain home remedies
Quick Share

முதுகு வலி பல காரணங்களால் ஏற்படும். குறிப்பாக பெண்களுக்கு முதுகு வலியானது மகப்பேறு காலம் முடிந்த பிறகு தோன்றும். எலும்பு தேய்மானத்தால் ஒரு சிலருக்கு முதுகு வலி உண்டாகலாம். முதுகு வலி இருக்கும் போது எந்த ஒரு வேலையும் செய்ய முடியாது. இந்த முதுகு வலிக்கான ஒரு சில தீர்வை தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

மஞ்சள் தூள்:

மஞ்சளில் உள்ள கர்குமின் என்ற பொருள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் வலி நிவாரண தன்பை கொண்டது. இந்த தன்மைகளால் மஞ்சளை முதுகு வலியை குறைக்க பயன்படுத்தலாம். அதற்கு ஒரு டம்ளர் சூடான பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து குடித்து வாருங்கள். இவ்வாறு நாள் ஒன்றுக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும்.

ஹீட்டிங் பேடு:

தசைகளில் உள்ள வலியை குறைப்பதில் ஹீட்டிங் பேடுகள் பெரிய உதவி புரிகிறது. வலி மற்றும் தசைகளில் உள்ள சுலுக்குகளை போக்கும். முதுகில் ஹீட்டிங் பேடை வைத்து 25 – 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடலாம். இதனை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் செய்யலாம்.

ஐஸ் பேக்:

ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் அனல்ஜசிக் தன்மைகளை தசைகளில் ஏற்படுத்தும் தன்மை ஐஸ் பேக்கிற்கு உண்டு. இதனால் முதுகு வலி ஏற்படாமல் பார்த்து கொள்ளும். பதினைந்தில் இருந்து இருபது நிமிடங்கள் வரை முதுகில் ஐஸ் பேக்கை தடவலாம். ஒரு நாளில் 1 – 2 முறை இவ்வாறு செய்து வர வேண்டும்.

வைட்டமின் B12:

வைட்டமின் B12 க்கு ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் அனல்ஜசிக் தன்மைகள் உண்டு. எனவே வைட்டமின் B12  முதுகு வலியை குறைக்க வல்லது. இதே போல வைட்டமின் C,D மற்றும் E யும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் அனல்ஜசிக் தன்மைகள் உடையது. நல்ல ஒரு மருத்துவரை ஆலோசித்து இந்த வைட்டமின்கள் நிறைந்த மாத்திரை அல்லது காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்து கொள்ளலாம்.

இஞ்சி:

இஞ்சியில் உள்ள ஜின்ஜரால் என்ற பொருள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் வலி குறைக்கும் தன்மை உள்ளது. முதுகு வலியை குறைப்பதில் இதற்கு பெரும் பங்கு உண்டு. சூடான தண்ணீரை ஒரு டம்ளரில் எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒரு துண்டு இஞ்சியை போட்டு 5 – 10 நிமிடங்கள் ஊற வேண்டும் விடவும். சுவைக்காக தேன் கலந்து இதனை பருகி வாருங்கள். அல்லது இஞ்சி எண்ணெயை முதுகில் தடவி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

Views: - 341

1

0