சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு மகிழ ஆறு பழ வகைகள்!!!!

21 May 2020, 4:56 pm
best fruits for sugar patients in tamil
Quick Share

பழங்களில் சர்க்கரை இருக்கும் காரணத்தால் பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆவாது என்ற பொதுவான ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால் உண்மையில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் பழங்களின் கிலைசிமிக் இன்டக்ஸ் (Glycemic index). வாழைப்பழம், திராட்சை, மாம்பழம், சீத்தாப்பழம், சப்போட்டா பழம் போன்றவைகளை அளவாக சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். அதே சமயம் அதிகமாக பழுத்த பழங்களை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது அல்ல.

★ஆப்பிள்:

best fruits for sugar patients in tamil

ஒரு மீடியம் அளவிலான ஆப்பிள் பழத்தில் குறைந்த அளவிலான கலோரிகளே உள்ளன. மேலும் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழமாக இதனை மாற்றுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் ஏற்படும் மாற்றங்களை சீர் செய்கிறது. ஆப்பிளில் உள்ள குவர்சிட்டின் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் இதய நோயாளிகளுக்கும் ஒரு சிறந்த பழமாக அமைகிறது.

★பப்பாளி பழம்:

best fruits for sugar patients in tamil

பப்பாளியில் ஏகப்பட்ட வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்திருப்பதோடு இதில் குறைந்த அளவிலான சர்க்கரையே உள்ளது. டைப் 2 டையாபெட்டிஸின் தீவிரத்தை குறைக்கும் தன்மை பப்பாளிக்கு இருப்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

★நெல்லிக்காய்:

best fruits for sugar patients in tamil

நெல்லிக்காயில் பாலிபீனால் அதிகமாக இருப்பதோடு ஆன்டி ஆக்ஸிடன்டு தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது. இதனால் சர்க்கரை ஆக்ஸிடைஸ் ஆவதை தடுக்கிறது. இன்சுலினை உறிஞ்சி இரத்ததின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இதனால் சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை எந்த தயக்கமும் இல்லாமல் எடுத்து கொள்ளலாம்.

★பெர்ரி:

best fruits for sugar patients in tamil

ப்ளூ பெர்ரியில் இயற்கையாகவே உள்ள ஆன்தோசையானின் என்ற பொருள் இன்சுலின் உற்பத்தியை தூண்டி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க கூடியது. பிளாக் பெர்ரி பழத்தில் கொட்டைகளில் உள்ள கிலைக்கோசைடு உடலில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றப்படுவதை தடுப்பதோடு இரத்தத்தில் காணப்படும் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

★செர்ரி பழம்:

best fruits for sugar patients in tamil

சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த செர்ரி பழத்தில் கிலைசிமிக் இன்டக்ஸ் அளவு மிக குறைந்த அளவில் அதாவது 29 ஆக தான் உள்ளது. ஆன்தோசையானின் மூலமாக அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்டு தன்மை மற்றும் குறைந்த அளவு கிலைசிமிக் இன்டக்ஸை கொண்டு இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவி புரிகிறது.

★சிட்ரஸ் பழங்கள்:

best fruits for sugar patients in tamil

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை மற்றும் பல சிட்ரஸ் பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழங்கள் ஆகும். இவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உடலில் உள்ள கொழுப்பை உடைத்து இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக்குகிறது. மேலும் திராட்சை பழத்தில் குறைவான கிலைசிமிக் இன்டக்ஸ் அளவே உள்ளது.

Leave a Reply