உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 5 உணவுகளை தவறாமல் சாப்பிடுங்க!

4 June 2021, 1:58 pm
Eat These 5 Foods to Boost Your Immunity
Quick Share

நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஆற்றல் வழங்குவதில் சில உணவுகள் சிறப்பாக செயல்படுகின்றன. அது போன்ற நோயெதிர்ப்பு சக்தி மிக்க உணவுகளைச்  சாப்பிடுவதன் மூலம் காய்ச்சல், சளி மற்றும் பல நோய்கள் ஏற்படாமல் நம்மை நாமே காத்துக்கொள்ள முடியும். நம் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு செயல்பட தேவையான ஐந்து வகையான ஊட்டச்சத்துக்களையும் மற்றும் அவை நிறைந்துள்ள உணவுளின்  பட்டியலையும் இப்போது பார்க்கலாம்.

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள்

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உடலின் அழற்சியைப் போக்கி நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு தேவைப்படும் ஒரு வகையான கொழுப்பு அமிலம் ஆகும்.

உங்கள் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க இந்த ஒமேகா -3 நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது முக்கியம். வாதுமை கொட்டைகள், சியா விதைகள், சால்மன், மத்தி, ஹெர்ரிங், டுனா மற்றும் கானாங்கெளுத்தி போன்ற எண்ணெய் மீன் மற்றும் ஆளிவிதை போன்ற  உணவுகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்டுகிறது. 

வைட்டமின் E

வைட்டமின் C போலவே, வைட்டமின் E ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பைக் கொண்டிருக்க, குறிப்பாக வயதான நபர்களிடையே வைட்டமின் E சத்து போதுமான அளவு இருப்பது மிகவும் அவசியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினசரி தேவையான வைட்டமின் E அளவைப் பெற,  வேர்க்கடலை வெண்ணெய், கோதுமை  பாதாம், சூரியகாந்தி விதைகள் போன்ற உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

துத்தநாகம்

துத்தநாகம் (Zinc) என்பது குறிப்பிட்ட நோயெதிர்ப்பு உயிரணுக்களின் உருவாக்கத்துடன் தொடர்புடைய ஒரு முக்கிய கனிமமாகும். மிதமான அளவு துத்தநாகம் கூட உங்கள் நோயெதிர்ப்பு செயல்பாட்டைக் குறைக்கலாம் என்று தேசிய சுகாதார நிறுவனங்கள் (NIH) அறிவுறுத்துகின்றது. துத்தநாகம் நிறைந்த சில சிறந்த உணவுகளில் முந்திரி, திராட்சை, சுண்டல், அவித்த பீன்ஸ், காய்கறிகள் போன்றவை அடங்கும்.

கரோட்டினாய்டுகள்

மற்றொரு வகையான ஆக்ஸிஜனேற்ற பண்புடையது கரோட்டினாய்டுகள். இது  பல தாவரங்களில் இயற்கையாகவே இருக்கும் நிறமிகளின் தொகுப்பு ஆகும். இதை உட்கொண்ட பிறகு, கரோட்டினாய்டுகள் வைட்டமின் A (நோயெதிர்ப்பு உயிரணுக்களை சீராக்க உதவும் ஊட்டச்சத்து) ஆக மாற்றப்படுகின்றன. கொழுப்புடன் சாப்பிடும்போது அல்லது சமைக்கும்போது அவை முழுமையாக உறிஞ்சப்படுகின்றன.

உங்கள் கரோட்டினாய்டுகளை அதிகரிக்க  மாம்பழம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கீரைகள்,  கேரட்,  பாதாமி, பப்பாளி போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

வைட்டமின் C

வைட்டமின் C குறிப்பாக பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நபர்களின் நோயெதிர்ப்பு மண்டலங்களை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்படக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. உங்கள் வைட்டமின் C நுகர்வு மேம்படுத்த, வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சிட்ரஸ் பழச்சாறுகள் மற்றும் திராட்சைப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்கள், ப்ரக்கோலி, ஸ்ட்ராபெர்ரி, கிவி பழம் சிவப்பு மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

Views: - 336

0

0