கொரோனாவுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த இந்த தேநீர் குடிங்க!

4 May 2021, 12:21 pm
fennel seeds tea recipe in tamil
Quick Share

நம் முன்னோர்களால் காலம்காலமாக பயன்படுத்தப்படும் பல மசாலாப் பொருட்கள் பல மருத்துவ குணங்கள் கொண்டவை. சமையலறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த பாரம்பரிய மசாலாப் பொருட்கள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் உதவியாக இருக்கும். மேலும், இவை எல்லா வயதினருக்கும் அதிகபட்ச நன்மைகளை வழங்கக்கூடியவை. இந்த மருத்துவ குணம் நிறைந்த  மசாலாப் பொருட்களுடன் சூப், கசாயம், காபி போன்ற பானங்களைத் தயாரித்து குடிப்பது உடலுக்கு வலிமை தரக்கூடியது.

இது போன்ற ஆரோக்கிய குணம் நிறைந்த பானங்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதோடு உடலையும் சுத்தப்படுத்தி, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

இந்த மசாலா பொருட்களில் அதிக மருத்துவ குணம் வாய்த்தது என்றால் பெருஞ்சீரகம் மற்றும் சீரகத்தைச் சொல்லலாம். பெருஞ்சீரகம் மற்றும் சீரகத்தில் தேநீர் போட்டு குடித்தால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் செரிமான அமைப்பைச் சீராக்கவும் உதவுகிறது. 

அதோடு, இந்த ஆரோக்கிய பணம் உங்களை பல நோய்களிலிருந்தும் விலக்கியே வைக்கிறது. சரி இப்போது இந்த பெருஞ்சீரகம் மற்றும் சீரக தேநீரை எப்படி நாமே செய்வது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

உங்களுக்கு தேவையான பொருட்கள்

 • 1 கப் தண்ணீர்
 • 1/2 டீஸ்பூன் பெருஞ்சீரக விதைகள்
 • சீரகம் 1/2 டீஸ்பூன்
 • இஞ்சி சிறு துண்டு
 • தேவைக்கேற்ப தேன்

செய்முறை:

 • ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். 
 • இப்போது, கொதிக்கும் நீரில் பெருஞ்சீரகம், சீரகம் மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நான்கு கொதிக்க விடவும். 
 • அடுத்து, ஒரு தட்டு வைத்து அதை மூடி 8-10 நிமிடங்கள் அப்படியே கொதிக்க விடவும். 
 • பெருஞ்சீரகம் மற்றும் சீரக விதைகள் நன்கு வெந்ததும் அதை இறக்கி சற்று ஆறவிடவும். 
 • கை பொறுக்கும் சூட்டுடன் வெதுவெதுப்பாக ஆனவுடன் உங்களின் சுவைக்கு ஏற்ப தேன் சேர்த்து கலக்கவும். 
 • இப்போது சூடான சுவையான பெருஞ்சீரக சீராக தேநீர் தயார். 
 • அதிகரித்து வரும் இந்த கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த தேநீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம். 
 • குறிப்பாக தேனை சூடுபடுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Views: - 226

2

0

Leave a Reply