அரிப்பு போன்ற தோலழற்சி பிரச்சினை இருக்கும்போது எந்தெந்த உணவெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா? Foods to avoid during Eczema

Author: Dhivagar
26 July 2021, 10:21 am
Foods you should avoid eating when suffering from eczema
Quick Share

அரிக்கும் தோலழற்சி அல்லது நாட்பட்ட தோலழற்சி போன்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கடுமையான அசௌகரியத்தை ஏற்படுத்தும். சருமத்தை பாதிக்கும் பெரும்பாலான மருத்துவ நிலைமைகளைப் போலவே, அரிக்கும் தோலழற்சி பிரச்சினையானது அரிப்பு, கொப்புளங்கள், தடிப்புகள் மற்றும் வறட்சி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். 

இது போன்ற பிரச்சினைகள் இருக்கும்போது சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால் சிக்கல் மேலும் அதிகமாகக்கூடும் என்பதால் இவற்றை தவிர்ப்பதுது நல்லதாக இருக்கும். அவற்றின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள்

சர்க்கரை இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்கிறது, இதனால் அழற்சி ஏற்படலாம். அழற்சி ஏற்படும் அபாயத்தைக் குறைக்க சோடாக்கள், கேக்குகள், எனர்ஜி பானங்கள் மற்றும் சாக்லேட்டுகள் போன்ற அதிக சர்க்கரைச் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

உலர் பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் T செல்கள் மற்றும் இம்யூனோகுளோபுலின்-E ஆகியவற்றின் வெளியீட்டைத் தூண்டுகின்றன, இவை இரண்டும் வீக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. எனவே, வேர்க்கடலை, முந்திரி, பாதாம் அல்லது அக்ரூட் பருப்புகள் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

முட்டை

தோலழற்சி பிரச்சினை ஏற்பட்டால் முட்டைகளை உணவில் சேர்துக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் இது அழற்சி பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும்.

நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவு, வெண்ணெய் மற்றும் துரித உணவுகளில் காணப்படும் டிரான்ஸ் கொழுப்பு, மற்றும் சிவப்பு இறைச்சி, வெண்ணெய் மற்றும் முழு கொழுப்புள்ள பால் உணவுகளில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்பு ஆகியவை வீக்கத்தை ஊக்குவிக்கும் மற்றும் அரிக்கும் தோலழற்சியின் அறிகுறிகளை மோசமாக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.

பால்

பால் ஒரு பொதுவான ஒவ்வாமை பொருளாகும், இது அரிக்கும் தோலழற்சி உள்ளிட்ட பல்வேறு நிலைகளுக்கான அறிகுறிகளைத் தூண்டும். பால் குழந்தைகளில் தோலழற்சி ஏற்படுத்தக்கூடியது, எனவே பெரும்பாலான குழந்தைகள் பால் குடிப்பதால், அவர்களுக்கு பால் ஒவ்வாமை ஏற்படக்கூடும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களின் வகையின் கீழ் வரும் ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம் மற்றும் பிற பழங்கள் ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் பொதுவான ஆதாரங்களாக அறியப்படுகின்றன. சிட்ரஸ் பழங்களில் காணப்படும் ரசாயனங்கள் அரிக்கும் தோலழற்சியின் அறிகுறிகளை அதிகரிக்கக்கூடும், எனவே அரிக்கும் தோலழற்சியால் அவதிப்படுபவர்கள் சிட்ரஸ் பழங்கள்  தவிர்ப்பது நல்லது.

அரிக்கும் தோலழற்சி இருக்கும்போது சாப்பிட வேண்டிய உணவுகள்

அழற்சி எதிர்ப்பு உணவுகள்: ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் மிகவும் பயனுள்ள அழற்சி எதிர்ப்பு உணவுகள் ஆகும். சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன் இறைச்சிகள் போன்ற மீன்களில் நல்ல அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது அழற்சியை குறைக்கும் ஆற்றல் கொண்டவை.

புரோபயாடிக்குகள்: தயிர் போன்ற புரோபயாடிக் உணவுகளில் நேரடி பாக்டீரியாக்கள் உள்ளன, அவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன, அவை அழற்சியைக் குறைக்க உதவும்.

குவெர்செட்டின் நிறைந்த உணவுகள்: குர்செடின் என்பது தாவர அடிப்படையிலான ஃபிளாவனாய்டு ஆகும், இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிஹிஸ்டமைன் என்பதால் இது உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் ஹிஸ்டமைனைக் குறைக்க உதவுகிறது. பச்சை இலை காய்கறிகள், மிளகுத்தூள், வெங்காயம், ஆப்பிள் போன்ற உணவுகள் குவெர்செட்டினின் வளமான ஆதாரங்கள் ஆகும்.

Views: - 473

0

0