“வீழ்வேனென்று நினைத்தாயோ” | வயசானாலும் ஆரோக்கியமாக இருக்க உதவும் அரிய மூலிகை இது! | Bacopa monnieri

8 June 2021, 9:04 am
health benefits of neerbrahmi in tamil
Quick Share

பொதுவாக வயதானால் உடல் வலுவிழந்து போய்விடும் என்பது தான் நம் எல்லோரின் பொதுவான கருத்து. ஆனால், வயதானாலும் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று வயோதிகத்திற்கே சவால் விட்டு வீறுகொண்டு எழச்செய்யும் அரிய மூலிகை தான் நீர்ப்பிரமி. 

பிரமம் என்றால் தலையாயது என்று பொருள். நம் உடலில் தலையாயது என்றால் மூளை தான். மூளையில் செயல்பாடுகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் மூலிகை இந்த நீர்ப்பிரமி. 

நீர்வளம் அதிகமாக இருக்கும் இடங்களில் தான் இந்த நீர்ப்பிரமி செழித்து வளரும். வழுவழுவென சதைப்பிடிப்புடன் முட்டை வடிவ இலைகளைக் கொண்டிருக்கும். இதில் நீல நிற மலர்கள் இருக்கும்.

health benefits of neerbrahmi in tamil

உங்களுக்கு குரல் கரகரப்பாக இருந்தால், நீர்ப்பிரமி இலைகளை வெண்ணெய் ஊற்றி வதக்கி அதை சாப்பிட குயில் ஓசை போல குரல் அவ்வளவு அழகாக இருக்கும். 

இதன் இலைகளை கீரைப் போல சமைத்து சாப்பிட்டு வர சிறுநீர் வெளியேறாமல் இருக்கும் பிரச்சினை எல்லாம் நீங்கி மலச்சிக்கல் பிரச்சினையும் குணமடையும்.

உங்களுக்கு மனசோர்வு, மனக்கஷ்டம் இருந்தாலும் இந்த நீர்ப்பிரமியைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்ல பலம் சேர்ந்து மனம் சம்பந்தமான பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றும்.

இந்த மூலிகையின் இலைகளில் இருந்து செய்யப்படும் பிரமி நெய் எனும்  ஒரு மூலிகை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும், நினைவாற்றலையும், அறிவாற்றலையும் சிறப்பாக செய்யும். நியாபக மறதி இருப்பவர்கள் இந்த பிரமி நெய்யை சோற்றுடன் பிசைந்து  சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு நீர்ப்பிரமி இலைப்பொடி, அமுக்கரா பொடி ஆகியவற்றை கலந்து பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உடற்சூடு பிரச்சினை நீங்க இந்த நீர்ப்பிரமி மிகவும் உதவியாக இருக்கும். நீர்ப்பிரமி இலைகளை அரைத்து பாலில் கலந்து கொடுத்தால் கோடை காலத்தில் உடலுக்குத் தேவையான குளிர்ச்சி கிடைக்கும்.

health benefits of neerbrahmi in tamil

நிறைய சாப்பிட்டு விட்டு ஜீரணம் ஆகாமல் அவதிபடுபவர்கள் இஞ்சி சாற்றில் நீர்ப்பிரமி இலைச்சாற்றையும் சேர்த்து கலந்து பருக செரிமான பிரச்சினைகள் எதுவும் இருக்காது.

நெஞ்சில் சளி கோழைக்கட்டிக் கொண்டு சுவாசிக்கவே சிரமமாக இருக்கும் போது நீர்ப்பிரமியை அரைத்து மார்பில் தேய்க்க இந்த பிரச்சினை சீக்கிரம் குணமடையும். 

மூட்டுவலி பிரச்சினை இருந்தாலும், இந்த நீர்ப்பிரமி இலையை அரைத்து ஆமணக்கு எண்ணெய் விட்டு குலைத்து பிளாஸ்திரி போல கட்ட நல்ல பலன் கிடைக்கும்.

Views: - 237

0

0