உடல் எடைக் கூட, மலச்சிக்கல் தீர என பல நன்மைகள் தரும் ஒரே கிழங்கு! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க | Palmyra Sprouts

10 May 2021, 12:52 pm
health benefits of panam kizhangu
Quick Share

பனை மரத்தை தான் நாம் கற்பக விருட்சம் என்று சொல்லுவோம். இந்த மரத்தின் வேர் முதல் நுனி வரை அனைத்துமே பயன்தரக்கூடிய ஒன்றுதான். அதே போல் நுங்கு, கல், பதநீர், பனங்கிழங்கு என இதிலிருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களுமே நமக்கு உடலின் ஆரோக்கியத்திற்குப் பலன் தரக்கூடியது தான்.

ஆனால், இவ்வளவு சிறப்புகள் நிறைந்திருக்கும் இந்த மரத்தின் அருமை தெரியாமல் இதை அழித்துக்கொண்டு இருக்கிறோம். இந்த பனை மரத்திலிருந்து கிடைக்கும் உணவுகள் மனிதர்களுக்கு ஆரோக்கியம் தரக்கூடியதாகவும், மருந்தாகவும் செயல்படுகிறது.

பனங்காயை வெட்டாமல் மரத்தில் விட்டால், அது நன்றாக பழுத்துவிடும். இந்த பழத்தை தரையில் ஒரு குழி தோண்டி அதில் புதைத்தால், அதிலிருந்து கிடைப்பதுதான் பனங்கிழங்கு.

மலச்சிக்கலால் பாதிக்கப்பட்ட மக்கள் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் தவித்து வருவார்கள். அது போன்ற சிக்கலை எதிர்கொண்டால் வெயிலில் காயவைத்த பனங்கிழங்கை பச்சையாக எடுத்து, அவற்றை போதுமான தண்ணீரில் மாவாக அரைத்து, தோசை சுட்டு சாப்பிட்டால், அது உடலில் குவிந்திருக்கும் மலத்தை எளிதில் வெளியேற்றி உடலைச் சுத்தப்படுத்தும் மற்றும் முழுமையான நிவாரணம் அளிக்கும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தியும் உடலைச் சுத்தம் செய்யும் வல்லமைக் கொண்டது.

பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

1. அதிக நார்ச்சத்து உள்ள பனங்கிழங்கை சாப்பிடுவதனால் மலச்சிக்கல் பிரச்சினைகள் குணமாகும்.

2. பனங்கிழங்கு சாப்பிட்டால் உடல் இளைத்தவர்கள் நன்கு பருமனாகலாம்.

3. உடலுக்கு குளிர்ச்சியையும் நல்ல வலிமையையும் தரக்கூடியது பனங்கிழங்கு.

4. பனங்கிழங்குடன் மஞ்சள் சேர்த்து வேகவைத்து, வெயிலில் காயவைத்து, பின்னர் அதை அரைத்து, கருப்பட்டி உடன் சேர்த்து சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.

5. பனங்கிழங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால், பெண்களின் கருப்பை மற்றும் உள் உறுப்புகள் வலுப்பெறும்.

6. நீரிழிவு நோய், வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் சிறுநீர் பாதை தொற்று உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

7. பனங்கிழங்கை அரைத்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டால் பசி நீங்குவதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும்.

Views: - 326

1

0