சூட்டு கட்டியை விரைவில் போகச் செய்ய மூன்று பயனுள்ள இயற்கை வைத்தியம்!!!

25 March 2020, 4:31 pm
Quick Share

கோடை காலம் ஆரம்பிக்க இருப்பதால் சூரிய வெப்பத்தால் நமக்கு பல பிரச்சனைகள் ஏற்படும். அவற்றுள் ஒன்று தான் சூட்டு கட்டி. பொதுவாக சூட்டு கட்டி தோல்பட்டை, கழுத்து, அக்குள், முகம் மற்றும் கழுத்து முதலிய பகுதியில் ஏற்படும். இருப்பினும் இவை உடலில் எங்கு வேண்டுமானாலும் வரலாம். சூட்டு கட்டியின் அறிகுறியாவது அந்த இடமே சிவப்பு நிறத்தில் மாறி வீக்கத்துடன் கொப்புளமாக சீழ் படிந்து இருக்கும்.

எந்த காலத்திலும் சூட்டு கட்டிகள் ஏற்படலாம். ஆனால் கோடை காலங்களில் இந்த பிரச்சனை அதிகமாக காணப்படும். இது வியர்வை மண்டலத்தை பாதிக்கும் பாக்டீரியாவினால் ஏற்படுகிறது. சூட்டு கட்டி அதிக வலியை தரும். அது தீவிரமாக இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது. ஆனால் சாதாரணமான சூட்டு கட்டிகளை வீட்டு வைத்தியங்கள் மூலமே சரி செய்து விடலாம். பாலில் உள்ள ஆன்டிஇன்ஃபிளமேட்டரி பண்பு இது போன்ற சூட்டு கட்டிகளில் இருந்து விடுபட உதவுகிறது.

1. பால் மற்றும் மஞ்சள் தூள்:

காயம் ஆற்றும் தன்மை மற்றும் ஆன்டிஇன்ஃபிளமேட்டரி பண்புகள் கொண்ட மஞ்சள் சூட்டு கட்டி அமுங்க செய்கிறது. இதற்கு ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளுடன் 1/4 கப் பால் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளவும். சூட்டு கட்டி இருக்கும் இடங்களில் இந்த கலவையை தடவி காயும் வரை அப்படியே விட்டு விடலாம். பிறகு குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள். இதனை வாரத்தில் இரண்டில் இருந்து மூன்று முறை செய்ய வேண்டும்.

2.பால் மற்றும் அரிசி மாவு:

சூட்டு கட்டியை குறைக்க இது ஒரு சிறந்த மருந்து. ஒரு கப் பாலுடன், இரண்டில் இருந்து மூன்று தேக்கரண்டி உப்பு மற்றும் ஒரு சிட்டிகை அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை சூடு செய்யுங்கள். பிறகு உப்பு மற்றும் அரிசி மாவை போட்டு நன்றாக கிளறி விடவும். பின்பு அடுப்பை அணைத்து விட்டு இந்த கலவையை ஆற வைத்துக் கொள்ளுங்கள். கட்டி இருக்கும் இடத்தில் இதனை தடவி காய்ந்த பின் ஒரு டவலை கொண்டு துடைத்து எடுத்து விடலாம். இதனை ஒரு நாளைக்கு இருமுறை செய்ய வேண்டும்.

3. பால் ஏடு மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர்:

ஆன்டிமைக்ரோபியல் தன்மை கொண்ட ஆப்பிள் சிடர் வினிகர் இன்ஃபெக்ஷனை தடுத்து வீக்கத்தை குறைக்கும். ஒரு தேக்கரண்டி பால் ஏடு, ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் எடுத்து கொள்ளலாம். அனைத்தையும் ஒன்றாக கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சில நிமிடங்கள் காய விடுங்கள். பிறகு சாதாரண தண்ணீர் கொண்டு கழுவி கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply