அல்சர் பிரச்சினையால் உங்கள் வயிற்றில் கடுமையான வலி ஏற்படுகிறதா? இந்த வீட்டு வைத்தியங்களை தெரிஞ்சிக்கோங்க… கவலைய விடுங்க

By: Dhivagar
8 September 2021, 11:33 am
home remedies for ulcer pain
Quick Share

வயிற்றில் புண் ஏற்பட்டால், பல்வேறு பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரலாம். ஆனால் சில வீட்டு வைத்தியங்கள் மற்றும் நோயெதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொண்டால் புண்களுடன் தொடர்புடைய வலி மற்றும் பிற அறிகுறிகளைப் போக்க முடியும். அதே போல சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் அல்சர் பிரச்சினையிலிருந்து குணமடையவும் முடியும். இவை குறித்து தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். 

அல்சர் பிரச்சினை இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய 6 வீட்டு வைத்தியங்கள்:

புரோபயாடிக்குகள்: 

  • புரோபயாடிக்குகள் புண்களை ஏற்படுத்தும் பாக்டீரியாவைக் கொல்வதில்லை, ஆனால் அவை செரிமான மண்டலத்தில் நல்ல குடல் பாக்டீரியாவின் சமநிலையை மீட்டெடுப்பதன் மூலம் புண்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன. 
  • இது போன்ற புரோபயாடிக்குகள் தயிர் மற்றும் புளித்த உணவுகள் மற்றும் பல்வேறு உணவுகளில் காணப்படுகிறது. 
  • புரோபயாடிக் உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் புண்களின் வலியைக் குறைப்பதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை புரோபயாடிக் நுண்ணுயிரிகளின் அதிக செறிவைக் கொண்டிருப்பதால் அல்சரின் காரணமாக ஏற்படும் வலியைக் குறைக்க உதவியாக இருக்கும்.

ஃபிளாவனாய்டுகள் நிறைந்த பழங்கள்: 

  • ஃபிளாவனாய்டுகளில் அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது, அவை வயிற்று மியூகஸை அதிகரிப்பதன் மூலம் வயிற்றுப் புறணியைப் பாதுகாக்க உதவும், இது வயிற்றுப் புண்ணுடன் தொடர்புடைய பாக்டீரியாவான H பைலோரியின் வளர்ச்சியைத் தடுக்கிறது. 
  • செர்ரி, ஆப்பிள், புளுபெர்ரி, வாழைப்பழம் போன்ற வண்ணமயமான பழங்களில் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. 
  • இவற்றை தவறாமல் உங்கள் உணவு வழக்கத்தில் சேர்த்துக்கொண்டால் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

தேன் 

  • தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன மற்றும் காயங்கள் மற்றும் புண்களை வேகமாக குணப்படுத்தும் பண்பும் தேனில் நிறைந்து காணப்படுகிறது.
  • தினமும் சிறிதளவு தேன் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மஞ்சள் 

மஞ்சள் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் வயிற்றுப் புண்களைத் தடுக்க மற்றும் புண்களின் அறிகுறிகளைப் போக்க உதவும்.

செவ்வந்தி 

செவ்வந்தி தேநீர் குடல் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்கவும், வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கவும் மிகவும் உதவியாக இருக்கும். அதோடு புண்களை வேகமாக குணப்படுத்தும் பண்புகளையும் கொண்டது.

பூண்டு 

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் பூண்டும் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது H பைலோரியின் வளர்ச்சியைத் தடுக்கிறது. அல்சர் சிகிச்சை மற்றும் புண்கள் தடுப்பு இரண்டிற்கும் பூண்டு மிகவும் உறுதியாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

Views: - 319

0

0

Leave a Reply