நாவில் எச்சில் ஊறும் ருசியில் அருமையான பீட்ரூட் கோதுமை அல்வா செய்ய சொல்லித்தாறோம் வாங்கோ!

Author: Dhivagar
26 July 2021, 5:53 pm
how to cook tasty Beetroot Wheat Halwa
Quick Share

பீட்ரூட் அல்வா ஒரு அருமையான இனிப்பு பண்டம். இதை ஒரு முறை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்குச் செய்து கொடுத்தால், இந்த ருசி உங்கள் நாக்கை விட்டே நீங்காது. அவ்வளவு சுவையான உணவு பதார்த்தத்தை எப்படி செய்வதென்று தெரிஞ்சுக்கலாம் வாங்க. 

இந்த பீட்ரூட் அல்வாவை சுமாராக 20 நிமிடத்தில் செய்து விட முடியும்.  இந்த பீட்ரூட் அல்வா செய்ய என்னென்ன பொருட்கள் தேவை என்பதை முதலில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

 • பீட்ரூட் – 1 பெரிய அல்லது 2 சிறியது
 • கோதுமை மாவு – 1/4 கப்
 • நெய் -1/4 கப்
 • சர்க்கரை – 1/2 கப்
 • ஏலக்காய் – 3
 • முந்திரி – 7-8

பீட்ரூட் கோதுமை அல்வா செய்முறை

 • பீட்ரூட்டின் தோலைச் சீவி, நன்கு பொடிப்பொடியாக நறுக்கி 8-10 நிமிடங்கள் வேகவைத்து விடுங்கள்.
 • அதை குளிரவைத்து நன்கு பிசைந்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு 1 அல்லது 1.25 கப் நன்கு பிசைந்த பீட்ரூட் தேவைப்படும்.
 • ஒரு திடமான அடிப்பாகம் இருக்கும் பாத்திரத்தில் 1 டீஸ்பூன் நெய்யை ஊற்றி சூடாக்கி, முந்திரியைப் போட்டு வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
 • அதே கடாயில் மேலும் கொஞ்சம் டீஸ்பூன் நெய் சேர்த்து, கோதுமை மாவு சேர்க்கவும். இதை 2 நிமிடங்கள் நன்கு வறுக்கவும்.
 • இப்போது நன்கு மசித்து வைத்த பீட்ரூட் சேர்த்து சமைக்கவும். தொடர்ந்து கிளறிக்கொண்டே இருங்கள்.
 • 3-4 நிமிடங்களுக்குப் பிறகு, சர்க்கரைச் சேர்த்து, மேலும் கூடுதலாக 2-3 டீஸ்பூன் நெய் மற்றும் அரைத்த ஏலக்காயைச் சேர்க்கவும்.
 • எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு 7-8 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
 • இறுதியாக வறுத்த முந்திரி சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான எச்சில் ஊறச்செய்யும் பீட்ரூட் கோதுமை அல்வா தயாராக இருக்கு!

சாப்பிடலாமா!

Views: - 233

0

0