மன அழுத்தத்தைப் போக்க அருமையான 5 டிப்ஸ் !

16 September 2020, 1:13 pm
how-to-get-relieved-of-stress-easily
Quick Share

மன அழுத்தம் என்பது இவங்களுக்குத்தான் வரும் இவங்களுக்கு வராது  என்பதெல்லாம் இல்லைங்க. நம்மல சுற்றி இருக்க சுழல்களும் சமூக அமைப்புகளும் அடிக்கடி நமக்கு தரும் வேண்டா பரிசு தாங்க இந்த மன அழுத்தம். இந்த மன அழுத்த பிரச்சனைங்கிறது மனதளவில மட்டும் இல்லாம உடல் அளவுளையும் நமக்கு பல பாதிப்புகளை தரக்கூடியது. இந்த மன அழுத்தம் குடும்ப பிரச்சினை, சமூக பிரச்சினை, அலுவலக வேலைகள், பணக்கஷ்டம்னு எதனால வேணும்னாலும் ஏற்படலாம்.  சரி, இந்த மன அழுத்தம் எப்படியோ வரட்டும். ஆனா, அதை நம்மாலேயே குறைக்க முடியுமா? கண்டிப்பா முடியுங்க. அதுக்கான எளிமையான ஐந்து வழிகளை பற்றி தான் இந்த பதிவுல பார்க்கபோறோம்.

1. நல்ல ஓய்வு

நமக்கு இருக்க மன அழுத்த அளவைக் குறைக்கிறது ஒன்னும் அவ்வளவு கஷ்டமான விஷயம் இல்லங்க. மன அழுத்தத்தை குறைக்க நீங்க ஏதாச்சும்  ஒன்ன ட்ரை பண்ண போய் அதுவே பெரிய மன அழுத்தமா மாறிடக்கூடாது. அதனாலே ஆழமான சுவாச பயிற்சிகள், தியானம், நல்ல இசைகளைக் கேட்பது, நல்ல தூக்கம் இதுமூலமா எளிமையா நீங்க மன அழுத்தத்தை குறைக்க முடியும்.

2. போதுமான அளவு தூக்கம் இருக்கணும்.

வேலைகளால் ஏற்படும் உடல் வழிகள் மற்றும் வேதனைகள் காரணமாக, இரவுல தூங்கமா இருக்கவங்களுக்கு மன அழுத்தம் ரொம்ப அதிகமாகும். அது போல இருக்க நிலைமையில நீங்க தூங்குற அறையில இருக்க லைட் எல்லாம் ஆஃப் பண்ணிட்டா உங்களுக்கு தன்னால தூக்கம் வரும். அதேபோல தூங்குற நேரத்துல செல்போன் எல்லாம் உங்க பக்கத்துல வச்சிக்கவே கூடாது.

3. சூடான நீரில் குளியல்

பலர் நாள் முழுக்க நின்னுக்கிட்டே வேலை செய்ற சூழல் ஏற்படலாம். அது போன்ற நிலைமையில மூட்டு வலி கால் வலி போன்ற சிக்கல்கள் எல்லாம் ஏற்படும். அதற்கு நீங்க  வேலையை விட்டு வீட்டுக்கு வந்ததும் சூடான நீர்ல குளிக்கணும். அந்த தண்ணீரின் வெப்பம் தசைகளை எல்லாம் தளர்த்தி கொடுக்கும். வலியின் தளத்திற்கு இரத்த விநியோகத்தை அதிகரிக்கவும் செய்யும். மேலும், தசைகளில் உள்ள விறைப்பு மற்றும் பிடிப்புகளை எல்லாம் நீக்கும்.

4. யோகா பயிற்சி

மனதொய்வில் இருந்து விடுப்பட அற்புதமான வழி யோகா என்று சொல்லலாம். மன ஊக்கத்திற்கு மட்டும் அல்லாமல் உடல் ஊக்கத்திற்கும் யோகா உதவுகிறது. 

ஒரே நேரத்தில் உங்கள் உடல் மற்றும் மனத்தின் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்வதோடு மன நிம்மதி கொடுக்குற பெருமை யோகாவுக்கு தாங்க உண்டு. வலி மற்றும் மன அழுத்தத்தை சரி செய்ய  தியானம் உங்களுக்கு கண்டிப்பாக உதவும்.

5. உணவு பழக்கம்

மன அழுத்தத்தை குறைப்பதில் உணவுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. உணவுகளில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளது மற்றும் அளவோடு ஆரோக்கிய உணவுகளைச் சாப்பிடும்போது நார்ச்சத்து, உடல் பருமன் மற்றும் இதய நோயிலிருந்து விடுபடவும் இது உதவுகிறது. அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள், தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்.

இது மாதிரியான சிம்பிள் டிப்ஸ் எல்லாம் நீங்க முயற்சி பண்ணினாலே எந்த பிரச்சினையும் இல்லாம சந்தோசமா இருக்கலாம்.

Views: - 1

0

0