பருக்கள், தழும்புகளுக்கு ஐஸ் கட்டி வைத்தியம் எப்படி செய்ய வேண்டுமென்று பார்ப்போமா…?

2 July 2021, 10:05 pm
ice cube remedy for face pimples and acne
Quick Share

பருக்களின் மீது என்றாவது ஐஸ் கட்டிகளை நீங்கள் வைத்து பார்த்ததுண்டா…..பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகளுக்கு ஐஸ் கட்டி ஒரு சிறந்த வைத்தியம். ஐஸ் கட்டிகள் அதிலும் குறிப்பாக மூலிகை பொருட்கள் கலந்த ஐஸ் கட்டிகளை முகத்தில் தடவி வரும்போது அது முகத்தை சில நொடிகள் மறத்து போக செய்வதோடு, வலியை குறைக்கிறது.

ஏன் ஐஸ் கட்டிகள் தடவ வேண்டும்?

பருக்களுக்கு இது ஒரு சிறந்த  மருந்து. இதனை சுலபமாக வீட்டிலே தயார் செய்து கொள்ளலாம். ஐஸ் கட்டிகளை தடவும் போது உள் வீக்கத்தை குறைத்து பருக்களின் அளவையும் குறைக்கிறது. மேலும் பருக்களினால் உண்டான சிவப்பு நிறத்தை மாற்றுகிறது. தண்ணீரால் மட்டும் உருவான ஐஸ் கட்டிகள் வீக்கத்தை குறைத்து, வலியை மட்டுமே போக்கும். 

அதனால் இன்ஃபெக்ஷனை தடுக்க முடியாது. ஆனால் மஞ்சள், கிரீன் டீ, கற்றாழை ஆகியவை கொண்டு செய்த ஐஸ் கட்டிகள் பருக்களை சுத்தமாக மறைய செய்து, அது மீண்டும் வராமல் தடுக்கும். அதோடு பருக்களினால் உண்டான தழும்பை போக்கவும் பெரிதும் உதவும்.

ஐஸ் கட்டிகளை எப்படி தடவ வேண்டும்?

ஐஸ் கட்டிகளை நேரடியாக முகத்தில் தடவாமல் அதனை ஒரு மெல்லிய மஸ்லின் துணியில் சுத்தி அதன் பிறகு முகத்தில் தடவி வரலாம். மிகவும் பொருமையாக பருக்கள் உடையாதவாறு தடவ வேண்டும். பருக்கள் உடைந்து விட்டால் இன்ஃபெக்ஷன் அதிகமாகி விடும். 

ஒரு சராசரி அளவு ஐஸ் கட்டி உருகும் வரை அதனை முகத்தில் தடவி கொள்ளலாம். ஆனால் இது தடவியதால் ஏதேனும் அலர்ஜி உண்டாகுமாயின் உடனடியாக ஐஸ் கட்டிகள் தடவுவதை நிறுத்தி விடுங்கள். பெரும்பாலான நபர்களுக்கு ஐஸ் கட்டிகள் எந்த வித அலர்ஜியையும் ஏற்படுத்தாது.

பருக்கள் மற்றும் தழும்புகளுக்கு சிறந்த ஐந்து ஐஸ் கட்டி மருத்துவம்:

புதினா ஐஸ் கட்டிகள்:

ஆங்கிலத்தில் மின்ட் என்று சொல்லும் புதினாவில் ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளது. எனவே புதினாவினால் ஆன ஐஸ் கட்டிகளை முகத்தில் தடவி வரும்போது இன்ஃபெக்ஷன் கூடிய விரைவில் சரி ஆகி விடுகிறது. மின்ட் ஐஸ் கட்டிகள் உள்ள வீக்கத்தை குறைத்து, பருக்களை விழச் செய்யும். இதனை செய்வதற்கு ஒரு டம்ளர் தண்ணீரில் புதினா இலைகளை போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை ஐஸ் டிரேவில் ஊற்றி கொண்டால் மின்ட் ஐஸ் கட்டி தயார்.

கிரீன் டீ ஐஸ் கட்டிகள்:

கிரீன் டீ ஐஸ் கட்டிகளும் பருக்களின் அளவை குறைத்து வலியை போக்குவதில் உதவி செய்கிறது. இதற்கு கிரீன் டீ செய்து அதனை ஐஸ் டிரேவில் ஊற்றி கட்டியானதும் பயன்படுத்தி கொள்ளலாம். இது பருக்களுக்கு ஒரு சிறந்த மருந்து, ஆனால் முகத்தில் தடவும் போது பொருமையாக தடவ வேண்டும்.

வெள்ளரிக்காய் ஐஸ் கட்டிகள்:

பெரிய அளவிளான பருக்கள் மற்றும் அதனால் வலி இருந்தால் இந்த வெள்ளரிக்காய் ஐஸ் கட்டி உங்களுக்கு பெரிதும் உதவி செய்யும். ஒரு வெள்ளரிக்காயை எடுத்து அதனை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்து ஐஸ் டிரேவில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து கொள்ளவும். கட்டிகள் தயாரான பிறகு அதனை முகத்தில் பொருமையாக தடவி கொள்ளலாம்.

கற்றாழை ஐஸ் கட்டிகள்:

வெள்ளரிக்காயை போலவே கற்றாழையும் உள் வீக்கத்தை குறைத்து இன்ஃபெக்ஷனை போக செய்யும் வல்லமை கொண்டது. இதற்கு கற்றாழை செடியின் ஒரு இலையை வெட்டி எடுத்து, அதன் ஓரங்களில் உள்ள முட்கள் மற்றும் தோலை நீக்கி துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள். பிறகு அதனை ஃப்ரீஸ் செய்து பயன்படுத்தி கொள்ளவும். 

தக்காளி ஐஸ் கட்டிகள்:

பருக்களால் உண்டான தழும்புகளை போக்க தக்காளி ஐஸ் கட்டிகளை தடவ வேண்டும். இதற்கு இரண்டு பழுத்த தக்காளி எடுத்து அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து கூடவே ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து ஐஸ் டிரேவில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து கட்டிகள் ஆக்கி கொள்ளலாம்.

Views: - 199

0

0