பெண்களை குறி வைத்து தாக்கும் ஜன்க் உணவுகள்…நீங்கள் ஜன்க் உணவு பிரியரா…இத படிங்க முதல்ல!!!

6 February 2021, 10:51 pm
Quick Share

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஒருவரின் உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பராமரிப்பது அவசியம். இந்த எடை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்க கூடாது. ஒவ்வொரும் சரியான உடல் எடையை பராமரிக்க சரியாக சாப்பிட வேண்டும். ஆனால் அந்த உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். துரித உணவுகள், இனிப்பு வகைகள், குப்பை உணவுகள் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

சமோசா, பீட்சா, பர்கர், ஃபிரைட் ரைஸ், சிக்கன் ரைஸ் போன்ற உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கும். ஆகவே இவற்றில் இருந்து விலகி இருப்பது நல்லது. பெண்களில் கல்லீரல், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகள் அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் செயல்பாடு சிறிய அளவில் இருக்கும். ஹார்மோன் மற்றும் என்சைம் சுரப்பிகள் கூட  பெண்களுக்கு குறைவாகவே இருக்கும். எனவே பெண்கள் ஜன்க் உணவுகளை சாப்பிட்டால் பல நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. 

ஜன்க் உணவுகள் ஒருவரின் வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் இறுதியில் அது  மூளையை பலவீனமாகவும் செயல்படாதவையாகவும் மாற்றக்கூடும். ஜன்க் உணவுகள் சுவை மிகுந்ததாக இருந்தாலும் கூட இந்த உணவுகளை உண்பதால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. இதனை அடிக்கடி உண்பது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் மற்றும் உடலுக்கு சரிசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தி விடும். பல விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் ஜன்க்   உணவு இதய நோய்களை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். கடைசியில்  மூளை பலவீனமாகவும் செயல்படாதவையாகவும் மாறக்கூடும் என்பதை நிரூபித்துள்ளது.

ஜன்க் உணவுகள் என்றால் என்ன?

ஊட்டச்சத்து மதிப்பு இல்லாத எந்தவொரு உணவையும் ஜன்க்  உணவாக கருதலாம். சாக்லேட், பேக்கரி பொருட்கள், பர்கர்கள் மற்றும் உப்பு மற்றும் எண்ணெயினாலான  தின்பண்டங்கள் அல்லது குளிர்பானங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். இவற்றில் அதிக கலோரி உள்ளடக்கம், உப்புகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன. இவற்றை நாம் எவ்வளவு அதிகமாக உட்கொள்கிறோமோ, நம்  உடலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உட்கொள்வது குறைவு.

இந்த உணவை உட்கொள்வது நிறைய உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது பெண்களுக்கு மோசமானது என்பதைப் பற்றி இந்த பதிவின் தொடக்கத்தில் பார்த்தோம். இதனால் ஏற்படும் பிற உடல்நல பிரச்சினைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம். 

◆உடல் பருமன்: 

ஜன்க் உணவுகளை உட்கொள்வதன் பொதுவான பக்க விளைவுகளில் ஒன்று உடல் பருமன் அதிகரிப்பு ஆகும். இதிலுள்ள  சர்க்கரை, கலோரிகள் மற்றும் கொழுப்புகள்   எடை அதிகரிப்பிற்கு பங்களிக்கிறது. உடல் பருமன் நீரிழிவு, மூட்டு வலி மற்றும் இதய நோய்கள் போன்ற பல மருத்துவ பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

◆நினைவாற்றல் மற்றும் கற்றலில் சிக்கல்கள்:  

ஜன்க் உணவை சாப்பிட்டவர்கள் அறிவாற்றல் சோதனைகளில் மோசமாக செயல்பட்டதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஜன்க் உணவுகள் உங்கள் நினைவகத்தை மோசமாக்கும் மற்றும் மூளையை பலவீனமாக்குகிறது. 

◆மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்: 

ஜன்க் உணவுகளில் அதிக சர்க்கரை மற்றும் கொழுப்புகள் உள்ளன. அவை மூளையில் சில வேதியியல் எதிர்வினைகளை ஏற்படுத்தும் மற்றும் அதன் செயல்பாட்டை பாதிக்கும். இதை அதிகமாக உட்கொள்வதன் மூலம், உடல் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்களை இழக்கிறது. இந்த அறிகுறிகள் இறுதியில் மூளையின் மன அழுத்தத்தை சமாளிக்க இயலாமைக்கு வழிவகுக்கும். மேலும் நீங்கள் மனச்சோர்வடைவதை உணரக்கூடும்.

◆பசியையும் செரிமானத்தையும் மோசமாக்குகிறது: 

அதிகப்படியான ஜன்க்   உணவை உட்கொள்வது மூளையை ஒரு குழப்பத்தில் விடுகிறது. அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தி மூளைக்கு அதிக உணவைக் கோருகிறது. இது இறுதியில் அதிகப்படியான உணவுக்கு வழிவகுக்கிறது. அதிகப்படியான ஜன்க்  உணவை ஜீரணிக்க முடியாமல் இது உடலுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.

◆போதுமான வளர்ச்சி இல்லாமை:

ஜன்க் உணவுகளை உண்டு  உயிர்வாழ்வது உடலின் சரியான வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களின் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் கொழுப்பு அமிலங்கள் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்களின் ஏற்றத்தாழ்வுடன் இணைந்து உங்கள் மூளை மற்றும் பிற உடல் பாகங்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம். சோடா மற்றும் சர்க்கரை அதிகமாக உட்கொள்வது பல் சிதைவு மற்றும் உங்கள் எலும்புகளை பலவீனப்படுத்துகிறது.

எனவே அதிக காசு கொடுத்து நோய்களை விலைக்கு வாங்காதீர்கள். குறைவான செலவில் இயற்கையான உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ பழகிக் கொள்ளுங்கள்.

Views: - 3

0

0