வேப்பம்பூவின் அசற வைக்கும் மகிமைகள்!!!

Author: Hemalatha Ramkumar
12 October 2021, 11:30 am
Quick Share

வேப்ப மரத்திற்கு இல்லாத நற்குணங்களே இல்லை என சொல்லும் அளவிற்கு ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் எப்படி பயனுள்ளதாக இருக்கிறதோ அதுபோல தான் வேப்ப மரமும் எக்கச்சக்கமான நன்மைகளை.நமக்கு தருகிறது. வேப்ப மரத்தின் இலை, பூ, பழம், பட்டை, காய் என அனைத்து பாகங்களும் அதிசயங்களை வாரி வாரி வழங்குகின்றன.

அதில் குறிப்பாக வேப்பம்பூவின் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். வேப்ப மரம் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது கசப்பு தான். இந்த காரணத்தினாலே பலர் வேப்பிலை என்றால் அலறி அடித்து ஓடுவர். அது போல வேப்பம்பூ என்று சொல்லும் போது அதனை சமைத்து சாப்பிட்டால் கசப்பாக இருக்குமே என்று எண்ணி பலர் அதனை தவிர்த்து விடுவர்.

ஆனால் இதனை சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் எந்த விதமான கசப்பும் தெரியாது. வேப்பம்பூவிற்கு செரிமான சக்தி அதிகமாக உள்ளது. வேப்பம்பூவை எண்ணெய் அல்லது நெய்யில் பொரித்து சாப்பிடும் போது அதன் கசப்பு தெரியாது. இவ்வாறு அதனை பொரித்து குழம்பிலும் சேர்த்து சாப்பிடலாம்.

வேப்பம்பூ குழம்பு சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்து விடும். சர்க்கரை நோயாளிகள் வேப்பம்பூவை தேங்காய் பாலுடன் கலந்து சாப்பிட்டு வர இரத்த சர்க்கரை அளவானது கட்டுக்குள் வரும். அது மட்டும் இல்லாமல் வேப்பம்பூவானது வாயுத்தொல்லை, வயிற்று வலி போன்றவற்றை போக்குவதாகவும் அறியப்பட்டுள்ளது.

உடலில் பித்தம் அதிகம் உள்ளவர்கள் வேப்பம்பூவினால் ஆன கஷாயத்தை பருகி வர நல்ல பலன் கிடைக்கும். மேலும் முக்கியமாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் இது நன்மை பயக்கும். வேப்பம்பூவை கஷாய வடிவில் குடித்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும். என்ன நண்பர்களே! வேப்பம்பூவின் நன்மைகளை பற்றி இப்போது தெரிந்து கொண்டீர்கள் அல்லவா… இனியும் இதனை ஒதுக்காமல் இயற்கையில் கிடைக்கும் உணவுகளை உண்டு நோய் நொடி இல்லாமல் வாழுங்கள்!

Views: - 174

0

0

Leave a Reply