உடல் எடையை குறைக்க அரிசியை ஒதுக்குபவரா நீங்கள்… உங்களுக்கு தான் இந்த பதிவு!!!

Author: Hemalatha Ramkumar
20 October 2021, 10:30 am
Quick Share

எடையைக் குறைக்கும்போது நம்மில் பலர் செய்ய விரும்பும் முதல் விஷயங்களில் ஒன்று அரிசியை சாப்பிடாமல் இருப்பது அல்லது அதன் நுகர்வைக் குறைப்பது. ஆனால் நீங்கள் அரிசியை முழுமையாக விட்டுவிட வேண்டுமா? அதைப்பற்றி பார்க்கலாம்.

அரிசி ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் அரிசியின் 10 நல்ல குணங்களை பாருங்கள்:

*அரிசி ஒரு ப்ரீ-பயோடிக் ஆகும். அது உங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்குள் இருக்கும் நுண்ணுயிரிகளின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் உணவளிக்கிறது.

* கஞ்சி முதல் பாயாசம் வரை பல வழிகளில் அரிசியை சமைக்கலாம்.

*பருப்பு வகைகள், நெய் மற்றும் இறைச்சி ஆகியவற்றுடன் அரிசியை சாப்பிடும் போது இரத்த சர்க்கரை சீராக இருக்கும்.

*அரிசி ஜீரணிக்க எளிதானது மற்றும் நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. இது சிறந்த ஹார்மோன் சமநிலைக்கு வழிவகுக்கிறது. இது குறிப்பாக வயதான மற்றும் மிகவும் இளம் வயதில் தேவைப்படுகிறது.

*அரிசி சருமத்திற்கு சிறந்தது. இதிலுள்ள அதிக புரோலாக்டின் அளவுகள் விரிவாக்கப்பட்ட துளைகளை நீக்குகிறது.

*தைராய்டு காரணமாக ஏற்படும் தலைமுடி உதிர்வை தடுத்து, அதன் வளர்ச்சியைத் தக்கவைத்து மேம்படுத்துகிறது.

*நெல் வளரும் சமூகங்கள் அதிக ஒத்துழைப்பு மற்றும் பாலின சமமாக இருக்கும்.

*அரிசியின் ஒவ்வொரு பகுதியும் பயன்படும். தவிடு கால்நடைகளுக்கு அளிக்கப்படுகிறது.

*அரிசியானது பருப்பு வகைகள் வளர மண்ணில் போதுமான ஈரப்பதத்தை வழங்கி இலைகளுக்கு இயற்கையான நைட்ரஜன் பொருத்துதல்களாக செயல்படுவதன் மூலம் மண்ணை மேலும் வளமாக்கும்.

* உள்ளூர், பருவகால மற்றும் உங்கள் உணவு பாரம்பரியத்தை பராமரிக்கிறது. இது சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சூழலியல் ஆகியவற்றை பராமரிக்கிறது.

Views: - 296

0

0