பிறந்த குழந்தையின் மென்மையான சருமத்தை கவனித்து கொள்வதில் சிக்கலா… கவலைப்படாம இத மட்டும் பண்ணுங்க!!!

Author: Udhayakumar Raman
30 March 2021, 8:13 pm
Quick Share

குழந்தை பெற்றுக்கொள்வதால் கிடைக்கும் மகிழ்ச்சியை சொல்லால் விவரிக்க முடியாது. ஆனால் குழந்தை பிறந்த சில நாட்களில் நாம் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குழந்தையின் மென்மையான தோலை மிகவும் பதமாக கையாள வேண்டும். இதைப்பற்றிய தந்திரங்கள் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்‌. எனவே உங்களுக்கு உதவும் வகையில் குழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாகவும், ஒளிரவும் வைத்திருக்க உதவும் எளிய வழிமுறைகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

 1. மசாஜ்:
  குழந்தைக்கு மசாஜ் செய்வது அவசியம். ஏனெனில் இது குழந்தையை நிதானமாக உணர உதவுகிறது மற்றும் தூக்கத்தை மேம்படுத்துகிறது. உங்கள் குழந்தையின் தோலை மசாஜ் செய்யும் போது, ​​குழந்தை உங்கள் அமைதியான தொடுதலை உணர்கிறது மற்றும் அது நேசிக்கப்படுவதை உணர்கிறது. இரசாயனம் இல்லாத மசாஜ் எண்ணெயைத் தேர்வுசெய்யுங்கள். புதிதாகப் பிறந்த குழந்தையின் தோலுக்கு பாதாம், தேங்காய் மற்றும் எள் ஆகியவை சிறந்த தேர்வாகும். இந்த எண்ணெய்களின் கலவையை நீங்கள் தேர்வு செய்து உங்கள் குழந்தைக்கு மசாஜ் செய்யலாம்.
 2. குளியல்:
  குழந்தைகளை சுத்தமாக வைக்க வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்க குளியல் நீர் சரியான வெப்பநிலையில் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஸ்பெஷலாக விற்கப்படும் குளிக்க சோப்பு மற்றும் ஷாம்பு பயன்படுத்தவும். ஈரமான காட்டன் பந்து மூலம் அவர்களின் முகத்தை சுத்தம் செய்யுங்கள். உடலை மென்மையான காட்டன் துண்டு கொண்டு உலர்த்தி, பின்னர் லோஷனைப் பயன்படுத்துங்கள்.
 3. டயபர் சொறி தடுக்க:
  ஒரு குழந்தைக்கு ஒவ்வொரு 2 முதல் 4 மணி நேரத்திற்கும் ஒரு டயபர் மாற்றம் தேவைப்படுகிறது. நீங்கள் டயப்பரை மாற்றும்போதெல்லாம், தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட குழந்தை வைப்ஸ்களை பயன்படுத்தி தோலைத் துடைத்து, டயபர் கிரீம் தடவுவதை உறுதி செய்யுங்கள். டயபர் சொறி ஏற்படாதவாறு சருமத்தை சில நிமிடங்கள் நன்கு காற்றில் உலர வைக்கவும்.
 4. குழந்தை தயாரிப்புகளை புத்திசாலித்தனமாகத் தேர்வுசெய்யுங்கள்:
  உங்கள் குழந்தையின் தோல் மென்மையானது. மேலும் தேங்காய் எண்ணெய், கடலை மாவு, தயிர், மஞ்சள் போன்ற வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவது சிறந்தது. இருப்பினும், ஒரு சிலருக்கு இவற்றை வீட்டில் தயாரிக்க நேரமில்லாமல் போகலாம். எனவே, நீங்கள் பயன்பாடுத்தும் பொருள் 100 சதவிகிதம் பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்த பின்னரே பயன்படுத்தவும். வாசனை இல்லாத சோப்புகள் மற்றும் குளியல் ஜெல்கள், கண்ணீர் இல்லாத ஷாம்புகள், டால்க் இல்லாத பவுடர்கள் மற்றும் மென்மையான லோஷன்களைப் பயன்படுத்துங்கள். வாசனை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பொருட்கள் சருமத்தில் கடுமையானதாக இருப்பதால் அவற்றைத் தவிர்க்கவும்.
 5. வானிலைக்கு ஏற்ப சருமத்தை கவனித்துக் கொள்ளுங்கள்:
  6 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு ஒரு சிறப்பு தோல் பராமரிப்பு வழக்கமும், வானிலைக்கு ஏற்ப சருமத்தை கவனித்துக் கொள்வதும் அவசியம். வெப்பமான கோடை, குளிர்ந்த குளிர்காலம் மற்றும் நேரடி சூரிய ஒளி ஆகியவை சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். குழந்தைகளுக்கு தளர்வான பருத்தி ஆடைகளை அணிவித்து, வெயிலிலிருந்து பாதுகாக்க ஒரு தொப்பியைப் பயன்படுத்துங்கள். குளிர்காலத்தில், வறண்ட வானிலை சருமத்தை வறண்டதாக ஆக்குகிறது. எனவே அதற்கு ஏற்ற தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்.

Views: - 180

0

0