உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளீர்களா… நீங்கள் நினைக்கும் அளவிற்கு உருளைக்கிழங்கு உங்கள் எதிரி அல்ல!!!

26 August 2020, 1:13 pm
Potato - Updatenews360
Quick Share

உங்கள் புரத உட்கொள்ளலை அதிகரிப்பது எடை இழப்பு மற்றும் தசை அளவு மற்றும் வலிமையை அதிகரிக்க உதவும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால், சாப்பிட்ட பிறகு பல மணிநேரங்கள் முழுதாகவும் திருப்தியாகவும் இருக்கும். புரோட்டீன் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் பசி ஹார்மோனின் அளவைக் குறைப்பதன் மூலம் பசியை அடக்குகிறது.  

இதனால் எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இந்த காரணங்களால், பல உணவியல் வல்லுநர்கள் கூடுதல் கிலோவை இழக்கவும், எடை இழப்பு போது தசை இழப்பைத் தடுக்கவும் புரதச்சத்து நிறைந்த உணவை பரிந்துரைக்கின்றனர். புரதம் நிறைந்த உணவுகள் என்று  கூறும்போது, ​​நீங்கள் பால் பொருட்கள், கோழி, முட்டை போன்றவற்றைப் பற்றி சிந்திக்கலாம். இவை புரதங்களின் சிறந்த ஆதாரங்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உருளைக்கிழங்கு பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? 

எடை இழப்பு பயணத்தில் இருப்பவர்களால் உருளைக்கிழங்கு பொதுவாக எதிரியாக கருதப்படுகிறது. ஆனால் மெக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், உருளைக்கிழங்கு எடை இழப்பை ஊக்குவிக்கும் மற்றும் தசை வலிமையை வளர்க்க உதவும் என்று கூறியுள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை, உருளைக்கிழங்கு, பொதுவாக மாவுச்சத்துள்ள காய்கறியாகக் கருதப்படுகிறது. இது சிறிய அளவில் இருந்தாலும் உயர்தர புரதங்களைக் கொண்டுள்ளது. 

தாவர அடிப்படையிலான புரதங்களைத் தேடுகிறீர்களா? உருளைக்கிழங்கை முயற்சித்து பாருங்கள். 

அவர்களின் ஆய்வுக்காக, மெக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இருபதுகளின் ஆரம்ப வயதில் இருந்த இளம் பெண்களை இந்த ஆய்வில் ஈடுபடுத்தினர். ஒரு குழு பரிந்துரைக்கப்பட்ட உணவுக் கொடுப்பனவில் (ஆர்.டி.ஏ) 0.8 கிராம் புரோட்டீனை அவர்களின் ஒவ்வொரு  கிலோகிராம் எடைக்கும் ஒவ்வொரு நாளும் என்ற அளவில் புரதத்தைக் கொண்ட உணவுகளை உட்கொண்டனர். மற்ற குழுவிற்கு கூடுதல் உருளைக்கிழங்கு புரதம் வழங்கப்பட்டது. ஆச்சரியப்படும் விதமாக, கூடுதல் உருளைக்கிழங்கு புரதத்தை உட்கொண்ட பெண்கள் தசைகளில் புரத வளர்ச்சியின் வீதத்தைக் காட்டினர். 

இந்த இளம் பெண்களில் தசையை பராமரிப்பதற்கு புரதத்தின் பரிந்துரைக்கப்பட்ட தினசரி கொடுப்பனவு போதுமானதாக இல்லை என்பதை இது காட்டுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும், ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வு தாவரங்களிலிருந்து வரும் புரதங்களின் தரம் தசையை ஆதரிக்கும் என்பதற்கான சான்றுகளை வழங்குகிறது என்று குறிப்பிட்டார்.

இன்று, பலர் விலங்கு சார்ந்த புரதங்களிலிருந்து விலகி, தாவர அடிப்படையிலான மாற்றுகளுக்கு மாறுகிறார்கள். நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், உருளைக்கிழங்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

உருளைக்கிழங்கு சாப்பிடுவது உங்கள்  கொழுப்பை அதிகரிக்கிறது: 

இது ஒரு கட்டுக்கதை. 

பெரும்பாலான மக்கள் உருளைக்கிழங்கை ஒரு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவாக கருதுகின்றனர். இது நம்மை எடை அதிகரிக்கச் செய்யும். ஆனால் இது முற்றிலும் உண்மை இல்லை. உண்மையில், உருளைக்கிழங்கு சரியான வழியில் சாப்பிட்டு கலோரி எண்ணிக்கையில் கவனம் செலுத்தினால், உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கை பற்றி இப்போது நாம் பேசவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

உருளைக்கிழங்கு இயல்பாகவே மோசமானதல்ல. ஆனால் அவை பாலாடைக்கட்டி, மயோ மற்றும் ஆழமான வறுத்தலுடன் இணையும் போது அதன் நல்ல பண்புகளை இழக்கின்றன. உருளைக்கிழங்கின் சில நன்மைகள் மற்றும் உங்கள் உணவில் உருளைக்கிழங்கின் ஆரோக்கியமான தயாரிப்பை எவ்வாறு சேர்ப்பது என்பதை பார்ப்போம்.

◆உயர் இரத்த அழுத்தம் நோயாளிகளுக்கு நல்லது:

அடுத்த முறை நீங்கள் உருளைக்கிழங்கை சமைக்கும்போது, ​​தோலை உரிக்க வேண்டாம். உருளைக்கிழங்கு தோலில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். அதிகபட்ச நன்மைகளைப் பெற காய்கறியை சுட்டு எடுத்து கொள்ளுங்கள். ஒரு பெரிய உருளைக்கிழங்கை தோலோடு சுட்டால், குறைந்தது 1,600 மி.கி பொட்டாசியம் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இது ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்பட்ட தொகையில் பாதி ஆகும்.

◆உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

உருளைக்கிழங்கு வைட்டமின் Cயின் ஒரு நல்ல மூலமாகும்.  இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு அவசியம். ஒரு நடுத்தர அளவிலான உருளைக்கிழங்கு உங்கள் தினசரி வைட்டமின் C  தேவையில் 45 சதவீதத்தை வழங்க முடியும். ஆய்வுகள் போதுமான அளவு வைட்டமின் C வைத்திருப்பது மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பை நிறுத்தி மன அழுத்தத்தை விலக்கி வைக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

◆செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது:

அதன் தோலில் உள்ள நார்ச்சத்துக்கு நன்றி.  இதனால் உருளைக்கிழங்கு உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் செரிமானத்தை அதிகரிக்கும். பலர் நினைப்பதற்கு மாறாக, உருளைக்கிழங்கு கொழுப்பு இல்லாதது, சோடியம் இல்லாதது மற்றும் சர்க்கரை குறைவாக உள்ளது. 

உங்கள் தகவலுக்கு ஒரு நடுத்தர அளவிலான உருளைக்கிழங்கில் சுமார் 1 கிராம் சர்க்கரை மட்டுமே உள்ளது. ஆனால் நீங்கள் இந்த காய்கறியை  வறுக்கவும், ஆரோக்கியமற்ற கொழுப்பு மற்றும் உப்பு நிறைய சேர்க்கவும் போகிறீர்கள் என்றால், அது மோசமான உணவாக மாறும்.