முகத்தில் வீக்கம் ஏற்படவும், கொழுப்புச் சேர்வதற்கும் காரணம் என்ன? எப்படி கட்டுப்படுத்தலாம்? | Face Fat remedies
Author: Hemalatha Ramkumar20 August 2021, 5:57 pm
கொழுகொழு வென குண்டான கன்னங்கள், பல்லில்லாத புன்னகை உடன் குழந்தைகள் இருந்தால் பார்க்கும்போதே கொஞ்ச தோன்றும். ஆனால் வளர வளர, ஒல்லியாக, உடற்கட்டுடன் இருக்கவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். உங்களுக்கும் இதே போல ஒல்லியாக அழகான முகம் வேண்டுமென்றால், நீங்கள் முதலில் உங்கள் முகம் வீக்கமாக, கொழுப்பு சேருவதற்கான காரணங்களை அறிந்துக்கொள்ள வேண்டும்.
உண்மையில், முகத்தில், குறிப்பாக தாடை, கழுத்து பகுதி, மற்றும் கன்னங்களின் சருமத்தில் கீழ் அதிகப்படியான கொழுப்பு படிவதன் காரணமாகவே முகம் பொதுபொதுவென வீக்கமாக தோன்றுகிறது.. மருத்துவ அடிப்படையில், இது ‘நிலவு முகம்’ (Moon Face) என்று குறிப்பிடப்படுகிறது. நீங்கள் முகத்தில் உள்ள கொழுப்பை இழக்க உங்கள் ஒட்டுமொத்த உடல் எடையையும் குறைக்கும்போது மட்டுமே முடியும்.
எடை இழப்பு எளிதில் நிகழக்கூடியது அல்ல இதற்கு நிறைய நேரம் எடுக்கும். மேலும், உங்கள் முழு உடலிலும் கொழுப்பைக் குறைக்காமல் உங்கள் முகத்தில் உள்ள கொழுப்பை மட்டும் குறைக்க முடியாது. மேலும், முகத்தில் உள்ள கொழுப்பை உடற்பயிற்சி இல்லை, உணவுக்கட்டுப்பாடு போன்ற செயல்முறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.
நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும், ஒரு நல்ல வாழ்க்கை முறையை பராமரிக்க வேண்டும், மேலும் கூர்மையான மற்றும் மென்மையான தோற்றத்தை பெற உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். இந்த பதிவு உங்கள் முகத்தில் கொழுப்பு சேர்வதற்கான காரணத்தையும், மற்றும் அழகான கன்னங்களையும் தோற்றத்தையும் பெற உதவியாக இருக்கும்.
நம்மில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு முக வடிவங்கள் மற்றும் முக அமைப்புகள் இருக்கும். நீள் வடிவ அல்லது வட்ட வடிவ முக வடிவங்கள் நீங்கள் கொஞ்சம் எடை போடும்போது வடிவம் மாறக்கூடும். முக தசைகள் மற்றும் நமது எலும்பு அமைப்பு நாம் இறுதியில் எப்படி இருக்கிறோம் என்பதை தீர்மானிக்கிறது.
இருப்பினும், ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமானது, மேலும் இதனால் பல்வேறு பகுதிகளில் கொழுப்பு சேமிக்கப்படுகிறது. சிலருக்கு வயிறு மற்றும் தொடைகளில் அதிக கொழுப்பு இருக்கலாம், சிலருக்கு முகங்களில் கொழுப்பு சேரக்கூடும்.
உங்கள் முகத்தில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதற்கான காரணங்கள்:
- மரபியல் மற்றும் ஹார்மோன் காரணிகள்
- எடை அதிகரிப்பு
- மோசமான உணவு
- உடற்பயிற்சி இல்லாமை
- முதுமை
- அதிகமாக வளர்ந்த முக தசைகள்
- ஸ்டீராய்டுகளின் பக்க விளைவுகள்
- தூக்கம் இல்லாமை
- மது அருந்துதல்
- அதிக சோடியம் உட்கொள்ளல்
- தைராய்டு பிரச்சினை
- மோசமான வாழ்க்கை முறை
முகம் வீக்கம் அடைந்து கொழுப்பு படுவதற்கான காரணங்கள்:
- ஒவ்வாமை எதிர்வினை
- பூச்சுக்கடி
- வெயில்
- உணவு ஒவ்வாமை
- ஆஞ்சியோடீமா – உங்கள் முகத்தின் தோலின் கீழ் திரவம் சேர்தல்
- அதிக உப்பு
- மது அருந்தும் பழக்கம்
- மன அழுத்தம்
- மாதவிடாய் கோளாறுகள்
- தைராய்டு குறைபாடு
- காயங்கள்
- நீரிழப்பு
வீங்கிய முக அமைப்பை சீராக மாற்றுவதற்கான வழிமுறைகள்:
- காலையில் உங்கள் முகத்தில் ஐஸ் வைக்கவும்
- உப்பு நிறைந்த உணவைத் தவிர்க்கவும்
- பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிர்க்கவும்
- அதிகமாக நீர்அருந்துங்கள்
- அதிகப்படியான மதுவைத் தவிர்க்கவும்
- கவிழ்ந்துப் படுத்து தூங்க வேண்டாம்
- குளிர்ந்த வெள்ளரிக்காய் துண்டுகள் அல்லது கிரீன் டீ பைகளைப் பயன்படுத்துங்கள்
- இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உங்கள் முகத்தை மெதுவாக மசாஜ் செய்யுங்கள்
- கண்களுக்குக் கீழே உள்ள வீக்கத்தைக் குறைக்க குளிர்ந்த ஐ-ரோலரைப் பயன்படுத்தவும்.
1
0