தடையில்லாத தூக்கம் வேண்டுமா… அசத்தலான ஐந்து டிப்ஸ்!!!

10 April 2021, 2:54 pm
Quick Share

நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் இருக்க ஒரு நல்ல இரவு தூக்கம் அவசியம். இது உங்களை புதியதாகவும் சுறுசுறுப்பாகவும் உணர வைக்கிறது. இருப்பினும், நாம் நன்றாக தூங்க முடியாத நேரங்கள் இருக்கலாம். மன அழுத்தம், அதிகப்படியான சிந்தனை, நீண்ட நேரம் மொபைல் அல்லது லேப்டாப் பார்ப்பது  போன்றவற்றால் இது நிகழலாம். போதுமான தூக்கம் கிடைக்காதது உங்கள் மனநிலையையும் ஆரோக்கியத்தையும் நினைவகத்தையும் மோசமாக பாதிக்கும்.

தூங்குவதற்கு மிகவும் கடினமாக முயற்சிப்பது உங்களை கவலையடையச் செய்யலாம். இதன் விளைவாக தூக்கமின்மை ஏற்படும். இது ஒரு வித வெறுப்பை  ஏற்படுத்தும். படுத்தவுடனே  தூங்குவதற்கு சில எளிய உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

1. உங்களுக்கு பிடித்தமான ஒரு நிகழ்வை காட்சிப்படுத்துங்கள்: 

இனிமையான நிகழ்வுகளை காட்சிப்படுத்துவது  உங்கள் மனதை ஆற்றவும், நரம்புகளை அமைதிப்படுத்தவும் உதவும். இது உங்கள் மன அழுத்தம் மற்றும் எதிர்மறை எண்ணங்களிலிருந்து உங்களைத் திசைதிருப்ப உதவும்.

2. உடற்பயிற்சி:

உடற்பயிற்சி நம்மை  சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது. உடற்பயிற்சி செய்வது பதற்றத்திலிருந்து விடுபடவும், இரவில் அமைதியான மற்றும் நிம்மதியான தூக்கத்தை உறுதிப்படுத்தவும் உதவும்.

3. தியானம் செய்யுங்கள்:

உங்கள் மனதை நிதானப்படுத்தி, தியானிப்பதன் மூலம் பதற்றத்தை விடுவிக்கலாம். தியானம் தூக்க முறைகளை ஒழுங்குபடுத்துவத்தி, பதட்டத்தை குறைக்கிறது. இது உங்கள் மனதை அமைதியாகவும்  ஆக்குகிறது.

4. நறுமண சிகிச்சை:

லாவெண்டர் மற்றும் புதினா போன்ற அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்துவது மனதை  அமைதிப்படுத்த பெரிதும்  உதவும். இது தூக்கத்தின் தரத்தை கணிசமாக மேம்படுத்துகிறது மற்றும் உங்களை எளிதில் தூங்க உதவுகிறது.

5. கவலைப்பட வேண்டாம்: 

தூங்க முடியவில்லையே என்று நினைத்து வருந்தாதீர்கள். இதுவே தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். எனவே, தூங்குவதற்கு உங்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக, ஓய்வெடுக்க முயற்சி செய்யுங்கள். இறுதியில் நீங்கள் தூங்கிவிடுவீர்கள் என்பதில் உறுதியாக இருங்கள்.

Views: - 38

0

0