ஐந்தே நிமிடத்தில் மூட்டு வலி குறைய அற்புதமான பாட்டி வைத்தியம்!!!

Author: Udayaraman
14 October 2020, 9:07 pm
Quick Share

வயதானவர்களுக்கு பெரும்பாலும் இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சினை மூட்டு வலி. அதிலும் ஐம்பது வயதை கடந்து விட்டாலே பெரும்பாலும் மூட்டு வலி கூடவே வந்து விடும். இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது எலும்பு தேய்மானம் ஆகும். நாம் உண்ணும் உணவில் ஏற்பட்ட மாறுதல்களின் காரணத்தினால் தான் இந்த பிரச்சனை அதிகப்படியாக தற்போது காணப்படுகிறது. 

ஆனால் கவலை கொள்ளாதீர்கள். எந்த ஒரு பிரச்சனைக்கும் நிச்சயமாக ஒரு தீர்வு இருக்கும். சித்த வைத்தியத்தில் மூட்டு வலியை நிரந்தரமாக சரி செய்யும் அற்புதமான தீர்வுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

★1/4 டம்ளர் தண்ணீரில் சிறிதளவு கருப்பு எள்ளை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளுங்கள். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இதனை சாப்பிட்டு வர மூட்டு வலி குறையும். 

★சிறிதளவு தேங்காய் எண்ணெயை காய்த்து அதில் ஒரு துண்டு கற்பூரத்தை சேர்க்கவும். எண்ணெய் சூடாக இருக்கும் போதே கற்பூரத்தை சேர்க்க வேண்டும். எண்ணெய் வெதுவெதுப்பாக ஆனதும் வலி இருக்கும் இடத்தில் எண்ணெயை சூடு பறக்க தேய்த்தால் உடனடியாக வலி போய் விடும். 

★ஒரு துண்டு சுக்கு எடுத்து அதனை சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து கொள்ளவும். வலி உள்ள இடத்தில் இந்த பேஸ்டை பத்து போல போட வலி பறந்து விடும். 

★வேப்பம்பூ மற்றும் வாகைப்பூ ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளுங்கள். இந்த பொடியில் 1/2 தேக்கரண்டி எடுத்து தினமும் உண்டு வர மூட்டு வலி குறையும். 

★கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி மற்றும் கடுகு ஆகிய மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து கொள்ளவும். இவற்றை தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து சூடாக்கவும். பிறகு இதில் சிறிதளவு கற்பூரம் சேர்த்து வலி இருக்கும் இடத்தில் தேய்க்கவும். இதனால் மூட்டு வலி மற்றும் வீக்கம் குறைந்து விடும். 

★வெங்காயம், இஞ்சி, ஆரஞ்சு பழம், மஞ்சள் மற்றும் செர்ரி பழம் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதினால் மூட்டு வலி படிப்படியாக குறையும்.

Views: - 84

0

0