யோகா செய்யும் போது நீங்கள் கட்டாயமாக பாலோ செய்யவேண்டிய விதிமுறைகள் என்னென்ன ?

25 March 2020, 10:15 am
yoga updatenews360
Quick Share

யோகா   செய்யும்   போது மனதும், உடலும்   தூய்மையாக இருக்க வேண்டும்.  யோகா செய்வதற்கு நீங்கள் சில  விதிமுறைகளை கட்டாயமாக பாலோ செய்ய   வேண்டும். அவற்றை பற்றி இதில் காண்போம்.

உடல் தூய்மை: 

காலை   நேரங்களில்   வெறும் வயிற்றில்  யோகா பயிற்சிகளை செய்ய   வேண்டும். மலச்சிக்கல் பிரச்சனை   உள்ளவர்கள் மூன்று டம்ளர் தண்ணீர்   குடித்து விட்டு, 10 நிமிடங்கள் கழித்து   ஆசனங்களை செய்ய துவங்கலாம். முதலில் சூரிய   நமஸ்காரம் செய்ய வேண்டும். சில சுற்றுகள் முடிந்தவுடன் மலம்   கழிப்பதற்கான உணர்வுகள் தோன்றும். பின்பு மலம் கழித்து விட்டு   வந்து ஆசனத்தை செய்ய வேண்டும். 

குளியல்: 

குளிப்பதற்கு   முன்போ அல்லது   குளிப்பதற்கு பின்போ ஆசனத்தை   செய்யலாம். ஆனால் இரண்டுக்கும் இடைவெளியில் அரை   மணி நேரம் இடைவெளி தேவை. குளிர்ந்த தண்ணீரில்   குளிப்பது உங்களுக்கு ஏராளமான நன்மைகளை தருகிறது. இது  உடலை புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் வைக்க உதவுகிறது. குளிர்ந்த   நீரில் குளித்து விட்டு ஆசனப் பயிற்சி செய்தால் உடலை வளைப்பதற்கு எளிமையாக   இருக்கும். குளிர்ந்த நீரில் குளிக்க பழக்கம் இல்லாதவர்கள், வெதுவெதுப்பான நீரில்   குளித்துக் கொள்ளலாம்.

பயிற்சிக்குரிய காலம்: 

யோகா   பயிற்சி   செய்யக்கூடிய   காலம் விடியற்காலை  4 முதல் 6 மணி வரை ஆகும்.  அந்த சமயங்களில் தான் இயற்கை   சூழ்நிலை அமைதியாகவும், சூரிய காந்த   அலைகள் நிரம்பியதாகவும் இருக்கும். உடலில் உள்ள   இரைப்பையும், குடலும் காலியாக இருப்பதால் யோகா செய்வதற்கு   அது எளிமையாக இருக்கும். யோகாவில் எளிமையாக கவனம் செலுத்த   உதவுகிறது. அதிகாலையில் எழும்ப முடியாதவர்கள் காலை 6 மணி முதல்  8 மணி வரை யோகா பயிற்சிகளை செய்யலாம். மாலை நேரங்களில் 5.30 முதல்  8 மணி வரை செய்யலாம்.

சூழ்நிலை: 

சுத்தமான   காற்றுள்ள, அமைதியான   இடங்கள் யோகா செய்வதற்கு   ஏற்றதாக இருக்கும். இயற்கை காட்சிகள்   நிரம்பிய பகுதி, பூந்தோட்டம் மற்றும் அருவி, நதி போன்ற நீர் நிலைகளின் கரைப்பகுதி  அல்லது அமைதியான அறை இருந்தால் போதும். அவை உங்களுக்கு யோகா செய்வதற்கு எளிமையாகவும்,  நிம்மதியாகவும், ஆரோக்கியமான சூழ்நிலையாகவும் இருக்கும் 

இருக்கை

யோகா  பயிற்சிகளை   வெறும் தரையில்  செய்யக்கூடாது. தரையில்   ஏதாவது ஒரு விரிப்பை விரித்தோ, ஜமுக்காளம் அல்லது சற்று அழுத்தமான போர்வையை விரித்தோ   அதன் மேல் அமர்ந்து செய்யலாம்.

ஆடை  மற்றும்   அணிகலன்கள்:

யோகா   பயிற்சிகள்   செய்யும் போது   தளர்வான ஆடைகளை உடுத்திக்   கொண்டு செய்ய வேண்டும்.

அணிகலன்கள்   அணிவதை தவிர்த்து   விடுங்கள், காரணம் அவை   உங்களுக்கு அசௌகரிகத்தை ஏற்படுத்தும்.

Leave a Reply