ஏரியில் மிதந்த 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்பு…

20 May 2020, 7:25 pm
Quick Share

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகேயுள்ள ராமநாயக்கன் ஏரியில் மிதந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ராமநாயக்கன் ஏரியில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்துள்ளது. இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து போலீசார் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் ஏரியில் மிதந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழந்த நபர் தற்கொலை செய்து கொண்டரா அல்லது யாரோனும் கொலை செய்துவிட்டு சடலத்தை ஏரியில் வீசி சென்றனரா என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்றும் விசாரித்து வருகின்றனர்.